படுக்கையறை என்பது இல்லத்தின் முக்கியமான பகுதி. எங்கெங்கே சென்று அலைந்து திரிந்து வந்தாலும் அமைதியாக தலைசாய்த்துக் கொள்ளும் இடம் படுக்கையறைதான்.
இரவில் அமைதியும், ஆனந்தமும் தவழ படுக்கையறையை அழகாக்கவேண்டியது அவசியம். படுக்கையறை அலங்காரம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள்.
படுக்கை அறை என்று பார்த்தோமானால் வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு அறை இருக்குமாறு அமைத்துக் கொள்வது நல்லது. ரெடிமேட் அலமாரிகளுக்கு பதிலாக சுவரில் இருக்குமாறு அலமாரிகளை கட்டி மரக் கதவுகளை மட்டும் அமைத்துக் கொள்ளலாம்.
குளியல் அறை ஒவ்வொரு படுக்கையறையிலும் இருந்தால் நல்லது. அல்லது குறைந்தது இரண்டாவது இருந்தால் நல்லது. அதில் ஒன்று வீட்டின் பொதுவான இடத்தில் இருந்தால் விருந்தினருக்கும் பயன்படுத்த வசதியாக இருக்கும்.
மாஸ்டர் படுக்கை அறையில் தேர்ந்தெடுக்கும் மெத்தை சரியானதாக இருக்க வேண்டும். அது இலவம் பஞ்சு மெத்தையாக இருக்கும் பட்சத்தில் உடல் நலத்திற்கு ஏற்றது. ஆடம்பரமான மெத்தையாக இல்லாமல் பாரம்பரியத்தை காக்கும் வகையில் உடல் நலத்திற்கு ஏற்றதாக இருப்பது நல்லது.
படுக்கையறைக்கு தேவையான தலையணைகளை சரியானதாக தேர்ந்தெடுக்க வேண்டும். அமைதியோடும், உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது தலையணை. எனவே வர்ணங்களோடு, சிறியதாக,தலைக்கு ஏற்ற உயரத்தில் தேர்ந்தெடுப்பது அவசியம்
படுக்கையறை அலங்காரத்தில் கற்பனைத்திறன் அவசியம். சுவர்களுக்கு பூசும் வர்ணங்கள் கண்களை உறுத்தாத இள நிறங்களில் இருப்பது அவசியம். மின் விளங்குகள் மைல்டாக குறிப்பாக நீல நிறத்தில் இருப்பது ஏற்றது என்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள்.
சில நேரங்களில் அமர்ந்து ரிலாக்சாக பேசுவதற்கு சிறிய அளவில் பெஞ்ச் அதுவும் மரத்தில் செய்யப்பட்டதாக இருந்தால் அறையை அடைக்காத வகையில் நேர்த்தியாக இருக்கும்.
கண்ணாடியில் வறைந்த சுவர் ஓவியங்களை மாட்டிவைப்பது அறைக்கு கூடுதல் அழகைத் தரும் அதுவும், கருப்பு, வெள்ளை படங்களாக இருந்தால் அறைக்கு அழகு கூடும்.
படுக்கையின் தலைப்பகுதிகளில் கண்ணாடிகளை வைத்திருப்பது அழகோடு, அமைதியான சூழலையும் தரும் என்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள். இந்த எளிமையான அலங்காரங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றவையாகவும் படுக்கையறையை அழகாகவும் வைத்திருக்கும் என்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள்.