நோய் வராமல் தடுக்கும் உடற்பயிற்சி உடல் எடை அதிகரிப்பது தான் பல்வேறு நோய்கள் வர காரணம் என்று மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நம்முன்னோர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள்.
அளவான உடல் அமைப்பு தான் அழகை தரும் என்று பெண்களில் பலர் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறார்கள். ஆண்களிலும் உடலை பேணுகிறவர்கள் உண்டு என்றாலும் ஏதோ ஒரு காரணத்தால் பலருக்கு உடல் எடை அதிகரித்துவிடுகிறது. உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி, நடைபயிற்சி தான் சிறந்த வழி.
நோய் வராமல் உடலை பேணுவதற்கு வழி என்ன? அதிக எடை உள்ளவர்கள், எந்த பயிற்சியை செய்தால் என்ன பலன்கிடைக்கும். குறிப்பிட்ட உடற்பயிற்சி செய்யும் போது எதை தவிர்க்க வேண்டும்? எந்த வகை உணவு உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பது பற்றிய குறிப்புகளை `மாலை மலர்’ வாசகர்களுக்காக டாக்டர் கமலி ஸ்ரீபால் வழங்குகிறார்.
இதோ உங்களுக்காக…
நீங்கள் தினமும் சுமார் 30 நிமிடங்கள் கீழ்கண்ட பயிற்சிகள் செய்தால் உங்கள் எடையின் படி சுமார் எவ்வளவு `கிலோ ஜோல்ஸ்’ குறையும் என்பது இங்கே தரப்பட்டுள்ளது.
1. 55 கிலோ எடை கொண்டவர்கள் குறையும் அளவு (கிலோ ஜோல்ஸ்)
2. 65 கிலோ எடை கொண்டவர்கள் குறையும் அளவு (கிலோ ஜோல்ஸ்) 3. 75 கிலோ எடை கொண்டவர்கள் குறையும் அளவு (கிலோ ஜோல்ஸ்) 4. 90 கிலோ எடை கொண்டவர்கள் குறையும் அளவு (கிலோ ஜோல்ஸ்)
55 கிலோ எடை கொண்டவர்கள் 1 எண்ணில் உள்ள அளவைவும், 65 கிலோ எடை கொண்டவர்கள் 2 எண்ணில் உள்ள அளவைவும், 75 கிலோ எடை கொண்டவர்கள் 3 எண்ணில் உள்ள அளவைவும், 90 கிலோ எடை கொண்டவர்கள் 4 எண்ணில் உள்ள அளவைவும் கணக்கில் கொள்ளவும்.
சைக்கிள் (10 கி.மீ. வேகம்) 400 500 550 600+
சைக்கிள் (20 கி.மீ. வேகம்) 700 800 1000 1200+
ஸ்கிப்பிங் 1200 1400 1500 2000+
ஓட்டம் (10 கி.மீ. வேகம்) 1250 1500 1700 2000+
ஓட்டம் (11 கி.மீ. வேகம்) 1600 1900 2000 2500+
நீச்சல் 25 மீட்டர்/நிமிடம் 450 550 650 750+
நீச்சல் 50 மீட்டர்/நிமிடம் 850 1000 1200 1300+
நடைபயிற்சி 3 கி.மீ./1 மணி 400 500 550 650+
நடைபயிற்சி 5 கி.மீ./1 மணி 550 650 750 850+
நடைபயிற்சி 6.5 கி.மீ./1மணி 750 900 1000 1100+
டென்னிஸ் 700 800 9000 1000+
மேற்கண்ட உடற்பயிற்சிகள் கூறப்பட்டிருந்தாலும் மருத்துவ ரீதியாக அன்றாடம் 30 நிமிட நடைபயிற்சியே உங்களை ஆரோக்கியமாக வைக்க போதுமானது.