Home சூடான செய்திகள் நீண்டநேரம் உறவு கொள்ள மாதுளம்பழம் ஜூஸ் குடிங்க

நீண்டநேரம் உறவு கொள்ள மாதுளம்பழம் ஜூஸ் குடிங்க

54

தாம்பத்ய உறவின் போது அதிக நேரம் உறவில் ஈடுபடுவதற்கு வயக்ரா போன்ற மாத்திரைகளை சிலர் உட்கொள்வார்கள்.

இனி அதெல்லாம் வேண்டாம் மாதுளம்பழம் ஜூஸ் குடிங்க என்று அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள்.

மாதுளம்பழத்தில் உள்ள சத்துக்கள் செக்ஸ் உணர்வை தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகின்றனவாம். இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.மாதுளம்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று ஏற்கனவே ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நிலையில் இது மனிதர்களின் செக்ஸ் உணர்வுகளை ஊக்குவிக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த எடின்பர்க் குயின் மார்க்கரெட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 21 வயது முதல் 64 வயதுவரை உடைய 58 பேர் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு தினசரி ஒரு கப் மாதுளம்பழச் சாறு கொடுக்கப்பட்டது.

15 நாட்கள் தொடர்ந்து பழச்சாறு கொடுக்கப்பட்டதில் அவர்களின் டெஸ்டோஸ்ட்ரோன் சுரப்பின் அளவு அதிகரித்தது தெரியவந்தது.ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கு இருந்த பிரச்சினைகளான தசை, எலும்பு நோய்கள், உடல்வலி, அட்ரீனலின் சுரப்பு கோளாறுகள், சினைப்பை பிரச்சினை போன்றவை சரியானது ஆய்வின் மூலம் தெரியவந்தது.

இதனால் பெண்களுக்கு செக்ஸ் உணர்வுகள் அதிகரித்தன.மனிதர்களின் செக்ஸ் உணர்வுகளை தூண்டுவதற்கு மாதுளம்பழச்சாறு எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாத அருமருந்து என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டெஸ்டோஸ்ட்ரோன் அளவு 16 முதல்30 சதவிகிதம் வரை அதிகரிப்பதனால் உயர்ரத்த அழுத்தம் குறைகிறது. அதே சமயம் மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் குறைந்து நேர்மறை எண்ணங்கள் அதிகரிப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தாம்பத்ய வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட முடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.