Home காமசூத்ரா நீங்கள் கட்டாயம் தினம் உடலுறவு கொள்ள வேண்டியதற்கான 9 காரணங்கள்..!

நீங்கள் கட்டாயம் தினம் உடலுறவு கொள்ள வேண்டியதற்கான 9 காரணங்கள்..!

59

உடலுறவு என்பது இன்பத்தை அடைந்து குழந்தையை பெறுவதற்கான வழி மட்டும் அன்று. உடலுறவினால், ஆண்கள் மற்றும் பெண்கள் உடல்களில் மிக முக்கியமான வளர்சிதை மாற்றங்களை பெறுகின்றனர். அப்படியென்ன உடலியல் மாற்றங்கள்..?? வாருங்கள் நண்பர்களே! அந்த மாற்றங்கள் என்னவென்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்…

1. மாரடைப்பு..

தற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எவெரெல்லாம் வாரத்திற்கு இருமுறை, மாதத்திற்கு ஒரு முறை என உடலுறவு கொண்டனரோ அவர்களில் பெரும்பாலானோர் மாரடைப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்; தினம் உடலுறவில் ஈடுபடுபவர்கள் இந்த பிரச்சனை இன்றி உள்ளனர். அதாவது உடலுறவு கொள்கையில் அப்பொழுது சுரக்கப்படும் ஹார்மோன்களும், உணர்வுகளும் இதயத்தசைகளை பலப்படுத்துகின்றன.

2. நோய் எதிர்ப்பு சக்தி..

தினம் உடலுறவு கொள்வது, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் உடலிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

3. மனஅழுத்தம்..!

தினம் உடலுறவு கொண்டு வாழ்பவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதில்லை என்றும், அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை மேற்கொள்வதாக அறியப்பட்டுள்ளது.

4. வலிநிவாரணி..!

உடலில் எவ்வகை வலி ஏற்படினும், தினமும் உடலுறவு கொள்வது அந்த வலிகளை போக்கி, ஆறுதலளிக்கும் காரணியாக விளங்குகிறது.

5. இரத்த ஓட்டம்..!

உடலுறவினை தினம் மேற்கொள்கையில், அவர்தம் சிறந்த இரத்த ஓட்டத்தை பெற்று நலமுடன் வாழ்கின்றனர்.

6. நல்ல உறக்கம்..!

தினம் உடலுறவு கொள்வதால், உடலுக்குத் தேவையான, போதுமான உறக்கம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

7. இயற்கை ஹார்மோன்..!

உடலுறவு கொள்ளும் போது உண்டாகும் உணர்ச்சிகளால், டீஹைடிரோபியன்றோஸ்டெரோன் என்ற ஹார்மோன் உடலில் வெளியாகிறது. இந்த ஹார்மோன் திசு இணைப்பு, உடைந்த திசுக்களை சரி செய்தல் போன்ற உடற்செயலிய மாற்றங்களுக்கு உதவுகிறது.

8. சரியான உடலமைப்பு மற்றும் ஆரோக்கியம்..

தினம் உடலுறவு கொள்ளும் மக்களுக்கு உடலமைப்பு எந்த குறைகளும் இல்லாது, சரியானதாக இருக்கிறது என்றும், அவர்கள் ஆரோக்கியமான மனநிலையுடன் உள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

9. ஹார்மோன் வளர்ச்சி..!

ஆண்கள் மற்றும் பெண்கள் உடலில் சுரக்கும் முக்கிய ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரான் போன்றவற்றின் வளர்ச்சிக்கு, உடலுறவு கொள்ளும் செயல் பேருதவி புரிவதாய் உள்ளது.

ஆகையால், நண்பர்களே! தினம் உடலுறவு கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை வழிநடத்தி, வளம் பெறுவீராக..!!