Home உறவு-காதல் நீங்க இந்த விஷயத்துல அடிக்டா இருக்கீங்களா? இது எவ்வளோ மோசமான விளைவுகள் தரும் தெரியுமா?

நீங்க இந்த விஷயத்துல அடிக்டா இருக்கீங்களா? இது எவ்வளோ மோசமான விளைவுகள் தரும் தெரியுமா?

29

சிலர் உருகி, உருகி காதலிப்பார்கள் ஆனால், அவர்கள் மத்தியிலான காதல் மிக விரைவாக பிரிந்துவிடும். ஏன் நாமே சிலரது அதிக பிரியமான காதலை கண்டு, இது தோல்வியில் தான் முடியும். இவ்வளவு உருகுதல் ஆகாது என நக்கல் செய்திருக்கலாம்.

உண்மையில் இதுபோன்ற காதலை லவ் அடிக்ஷன் என்கின்றனர். உருகி, உருகி காதலிக்க வேண்டும் எண்ணம் தான் இருக்குமே தவிர, அவர்களுக்குள் உண்மையிலே காதல் இருக்காது. இது எதனால் ஏற்படுகிறது. இந்த லவ் அடிக்ஷனை எப்படி கண்டறிவது என்பது பற்றி இங்கு காணலாம்…
அளவுக்கு மீறிய உணர்வுகள் வெளிப்படும். திகட்டும் அளவிற்கு காதலை காட்டுவார்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான். இதுவும் போக, போக தீய விளைவுகள் உறவில் எட்டிப்பார்க்க வைக்கும்.
காதல் அடிக்டாக இருப்பவர்கள் ஒரே உறவில் நீண்ட நாள் நீடிக்க மாட்டார்கள். உற்சாகம் குறைந்தவுடன் பிரிந்துவிடுவார்கள்.
உண்மையாக காதலிக்கிறேன் என்று கூறினாலும். அளவுக்கு மீறி காதலில் அடிக்டாக இருப்பவர்கள் எப்போதும் புதிய துணையை தேடிக் கொண்டே இருப்பார்கள். சில சமயம் ஒரே நேரத்தில் இருவருடன் பழக முயல்வார்கள்.

காதலில் அடிக்டாக இருப்பவர்கள், ஏற்கனவே திருமணமான நபருடன் இணையவும் தயங்க மாட்டார்கள். இது, தவறான பாதையில் வாழ்க்கையை திசைத்திருப்பிவிடும்.
காதலி தொலைவில் இருந்தால், வெளியூருக்கு சென்றுவிட்டால், காதலில் அடிக்டாக இருப்பவர்களால் சாதரணமாக இருக்க முடியாது, அசௌகரியமாக உணர்வார்கள்.
திருமணமான காதல் அடிக்ஷன் கொண்டவர்கள், தங்கள் துணையை ஏமாற்ற தயங்க மாட்டார்கள். இரண்டாம் யோசனைக்கே இடம் இருக்காது.

காதலில் அடிக்ஷனாக இருப்பவர்களுக்கு காதலும், தாம்பத்தியமும் தங்களை பெருமிதமாக உணர மட்டுமே தேவைப்படும். அவர்களால் பிரிவையும், பிரிவின் வலியையும் கையாள முடியாது.
காதலில் சிலர் அடிக்ஷனாகி இருப்பவர்கள் பெரும்பாலும், குழந்தை பருவத்தில் அதிகம் அன்பு செலுத்தப்படாதவர்களாகவும், அன்பை வெளிப்படுத்த வாய்ப்புகள் இல்லாமல் போனவர்களாகவும், அதிக முறை நிராகரிப்புக்கு உள்ளானவர்களாகவும் தான் இருக்கிறார்கள்.
எப்படி போதை அடிக்ஷனுக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமோ, அப்படி தான் மன ரீதியான இந்த அடிக்ஷனுக்கும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் இது பெரியளவிலான மன நோயாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.