பெலிவியூ கடற்கரை
டென்மார்க்கில் உள்ளது இந்த கடற்கரை. வசந்த காலங்களில் உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இங்கு அலைமோதும். கடந்த ஆண்டு கோடைகாலத்தில் இங்கு வெள்ளப்பெருக்கு உண்டானது.
வெரிக் கடற்கரை
கொலம்பியாவில் உள்ள இந்த கடற்கரை தான் கனடாவின் முதல் நிர்வாணக் கடற்கரை என்பது குறிப்பிடத்தக்கது. அஅதபோல் வடக்கு அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய கடற்கரையும் இது தான்.
ஹலோவர் கடற்கரை, ஃபுளோரிடா
இந்த கடற்கரை அந்த நாட்டு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த கடற்கரைக்கு நிர்வாணமாக ஊர் சுற்ற ஒரு நாளைக்கு 7000 க்கும் மேற்பட்டோர் வந்து போகிறார்களாம். இந்த கடற்கரையின் சிறப்பே இங்கு குவிந்திருக்கும் வெண்மணல் தான். மொினா கடற்கரையைப் போல இல்லாமல் மிக சுத்தமாக, ஒரு சிறிய துண்டு காகிதத்தைக் கூட இந்த கடற்கரையில் பார்க்க முடியாது.
மாசரன்டுப்பியோ கடற்கரை, பிரேசில்
இந்த கடற்கரை பிரேசிலில் உள்ளது. ரோட்டில் இருந்து 1.5 கிலோமீட்டர் வரை மணற்குவியலாக இருக்கும் இந்த கட்ற்கரை 14 கிலோமீட்டர் வரை அலைகளில் உரசியபடியே நடந்து செல்வதற்கு ஏற்ப விரிந்து நீண்டு செல்கிறது.
பல்கியாஸ் கடற்கரை,
கிரீஸில் உள்ள இந்த கடற்கரை இந்நாட்டில் உள்ள மிகப் பெரிய கடற்கரை ஆகும். கிழக்கு நாடுகளில் உள்ள மக்கள் இங்கு மிக அதிகமாக வருகை தருகின்றனர். எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் மிகச் சுதந்திரமாக ஆடையின்றி இந்த கடற்கரை வலம் வர முடியும்.