காலங்கள் செல்ல செல்ல, கருவுறும் திறன் குறைந்து கொண்டே இருக்கிறது. 20 வயது, 30 வயது, 40 வயது என ஒவ்வொரு வயதிலும் மாறிக்கொண்டே இருக்கிறது. பெண்களின் கருமுட்டையின் தரம் நாளாக நாளாக மாறிக்கொண்டே இருக்கிறது. மேலும் கருமுட்டையின் ஆரோக்கியம் நபருக்கு நபர் வேறுபடுவதாகவும் இருக்கிறது. இந்த பகுதியில் கருமுட்டையின் வளம் 20, 30 மற்றும் 40 வயதுகளில் எந்த அளவிற்கு மாறுகிறது என்பது பற்றி காணலாம்.
20 வயதிற்கு முன்னர் : பிறக்கும் போது 1-2 மில்லியன் கருமுட்டைகள் பெண்களுக்கு இருக்கும். பெண்களின் 20 ஆவது வயதில் 100-200 ஆயிரம் கருமுட்டைகள் மட்டுமே மீதியாக இருக்கும். ஆனால் கருமுட்டைகளின் தரம் இந்த வயதில் அதிகமாக தான் இருக்கும். இதனால் கருவுறும் தன்மை மிக அதிகமாக இருக்கும்.
20 வயதிற்கு மேல்..! பெண்களின் கருவுறும் தன்மையில் 20 வயதிற்கு மேல் மிகச்சிறிய மாற்றம் நிகழ்கிறது. 20 வயதிற்கு மேல் முதல் வருடத்திலேயே பெண்கள் கருவுற 75% வாய்ப்புகள் இருக்கின்றன.
30 வயதிற்கு முன்னர்..! முப்பது வயதிற்கு முன்னர் பெண்களுக்கு ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போதும் சுமார் 1000 முட்டைகள் வீதம் குறைந்து விடுகின்றன.
30 வயதிற்கு பின்னர் : 30 வயதிற்கு பின்னர் கருவுறுதலுக்கு 50% வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றன. ஒரு வருட முயற்சியில் கருவுறுதலுக்கான வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் கருமுட்டைகளில் முப்பது வயதிற்கு பின்னர் குரோமோசோம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்துவிடுகின்றன. கரு கலைவதற்கான வாய்ப்புகள் முப்பது வயதிற்கு பின்னர் அதிகரிக்கிறது. எனவே ஆரோக்கியமான பிரசவம் தேவை என்றால் 30 வயது வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
40 வயதிற்கு முன்னால்..! 40 வயதில் கர்ப்பமானால் பிறக்கும் குழந்தைக்கு குரோமோசோம் குறைபாடுகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். கருவுறும் வாய்ப்பும் மிக மிக குறைவாகிறது.
45 வயதிற்கு மேல்..! 45 வயதிற்கு மேல் மிகக்குறைந்த அளவு பெண்களுக்கு மட்டுமே வெற்றிகரமான பிரசவம் நடந்துள்ளது. 45 வயதிற்கு மேல் கருவுறும் தன்மை மிக மிக குறைவு. அதுமட்டுமின்றி ஒரு சில பெண்களுக்கு 45 வயதிலேயே மெனோபாஸ் காலம் வந்துவிடுகிறது.