கத்தரிக்காய், அவரைக்காய், வாழைக்காய், கேரட், பீன்ஸ், உருளை போன்ற காய்கறிகள்(எல்லாம் சேர்த்து) – ஒரு கிலோ
பாசுமதி அல்லது சீரக சம்பா அரிசி – ஒரு கிலோ
வெங்காயம் – 400 கிராம்
தக்காளி – 400 கிராம்
புதினா – ஒரு கட்டு
கொத்துமல்லி இலை – ஒரு கட்டு
தயிர் – ஒரு கப்
இஞ்சி, பூண்டு (அரைத்தது) – 100 கிராம்
பட்டை – 2
லவங்கம் – 2
பிரிஞ்சி இலை – 2
பச்சை மிளகாய் – 8
தனியா தூள் – 2 குழிக்கரண்டி
செய்முறை:
* காய்கறிகள், தக்காளி, புதினா, கொத்துமல்லி இலை போன்றவற்றை நறுக்குங்கள்.
* குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் இலை தாளித்து புதினா, கொத்து மல்லி இலை, இஞ்சி – பூண்டு அரைத்ததையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
* அதிலேயே தக்காளி, வெங்காயத்தைப் போட்டு பச்சை வாசனை போக நன்றாக வதக்குங்கள்.
* அத்துடன் பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்துக் கிளறுங்கள்.-
* அதன் பின்பு, அரிசி, மல்லித்தூள் சேர்த்துக் கிளறி விடுங்கள்.
* இப்போது தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* குக்கரில் இருந்து 3 விசில் சத்தம் வந்ததும் அடுப்பிலேயே 5 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி விடுங்கள்.
அவ்வளவு தான்…நாட்டுக் காய்கறி பிரியாணி ரெடி.