சீரான தூக்கம் ஞாபகசக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்குவகிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலில் உள்ள Federal பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது மனித மூளையில் பலமான மற்றும் பலவீனமான செயற்பாடுகளைக் கொண்ட பகுதிகள் காணப்படுவதாகவும், பலவீனமான பகுதிகளில் சிறந்த செயற்பாட்டினை வெளிக்காட்ட தூக்கம் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூக்கத்தின்போது அநாவசியமாக மூளையில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் அழிக்கப்பட்டு ஞாபக சக்தி அதிகரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர எலிகளின் தூக்க செயன்முறையும், மனித தூக்க செயற்பாடும் ஒன்றாக இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.