Home குழந்தை நலம் தோல் தடிப்பும் கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளும்

தோல் தடிப்பும் கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளும்

33

28-1403956586-4-babyகோடையின் கொளுத்தும் வெயில் வெப்பத்தோடு பல பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது. சூரியனிடம் இருந்து தப்பிக்க நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும், சூரியனின் வெப்பத்தால் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியாது. கோடைக்காலத்தில் பெரியவர்களை விட குழந்தைகள் அதிக சருமப் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் பெரியவர்களை விட குழந்தைகளே அதிகம் வெயிலில் சுற்றுகின்றனர்.
கோடைக்காலத்தில் குழந்தைகளைப் பாதிக்கும் சில தோல் தடிப்புப் பிரச்சனைகள் பற்றிப் பார்ப்போம்.
வெப்பத்தால் ஏற்படும் தோல் தடிப்பு: கோடைக்காலத்தில் எரிச்சலை உண்டாக்கும் வெப்பத்தால் அதிகமாக ஏற்படும் பிரச்சனைகளில் இது ஒன்று. கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளுக்குமே கோடைக்காலத்தின்போது தோல் தடிப்புப் பிரச்சனைகள் வரும். கோடைக்காலத்தின்போது அதிகமாக வியர்ப்பதால் தோலில் உள்ள நுண்துளைகள் அடைத்துக்கொள்வதால் அரிப்பு ஏற்படும், இதுவே வெப்பத்தால் ஏற்படும் தோல் தடிப்பு.
துளைகள் அடைத்துக்கொள்வதால் வியர்வை வெளியேறி ஆவியாக முடியாமல் போகும்.

பொதுவாக இந்தத் தோல் தடிப்பு சில நாட்களில் தானாகவே சரியாகிவிடும். இதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், குழந்தைகள் அதிக நேரம் வெயிலில் நடமாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாடி லோஷன், கிரீம் போன்றவை தோலின் நுண்துளைகளை அடைத்துக்கொள்ளலாம், இது பிரச்சனையை இன்னும் மோசமாக்கலாம், எனவே அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.
குழந்தைகளுக்கு சவுகரியமான, தளர்வான காட்டன் ஆடைகளை அணிவிக்கவும். லாக்டோகேலமைன் லோஷன் பயன்படுத்துவதால் தோலில் ஏற்படும் எரிச்சல் குறையும். தோல் அதிகம் சிவந்திருந்தால், தடிப்பு கடுமையாக இருந்தால், மருத்துவரிடம் செல்லவும்.

வேனிற் கட்டி: கோடைக்காலம் என்றாலே இந்த வேனிற் கட்டிகளும் வந்துவிடும். வேனிற் கட்டி என்பது சங்கடமான பிரச்சனைதான். வெயிலில் விளையாடுவது உடலுக்கு நல்லதல்ல என்று பல குழந்தைகளுக்குத் தெரியாது. சூரியக் கதிர்கள் கொஞ்ச நேரம் நம் உடலில் படுவது நல்லது தான், ஆனால் நீண்ட நேரம் சூரிய வெப்பத்தில் இருப்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு காட்டன், மெலிதான ஃபேப்ரிக்கால் ஆன முழுக்கை ஆடைகளை அணிவிக்கவும். குழந்தைகள் வெளியில் செல்லும் முன்பு, குழந்தைகளுக்கான சன்ஸ்கிரீனைத் தடவவும். அவர்களின் தலையையும் முகத்தையும் மறைக்க தொப்பி போட்டுவிடவும். நீண்ட நேரம் வெயிலில் இல்லாதபடி பார்த்துக்கொள்ளவும். உங்கள் குழந்தைகளுக்கு ஏற்கனவே வேனிற் கட்டிகள் வந்துவிட்டிருந்தால், குளிர் ஒத்தடம் கொடுத்து குளிர்விக்கவும். மருத்துவர் பரிந்துரைக்கும் லோஷன் அல்லது கற்றாழை (ஆலோவேரா) ஜெல் தடவவும். அப்போதும் நிவாரணம் கிடைக்காவிட்டால், உடனடியாக மருத்துவ உதவி பெறவும்.
தோல் ஒவ்வாமை: தோல் ஒவ்வாமை பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு கோடைக்காலத்தில் அதிகப் பிரச்சனைகள் ஏற்படும். ஈரப்பதமும் வெப்பமும் அதிகரிப்பதால் இப்படி ஆகிறது. தோல் தடிப்புச் சொறி அல்லது யூர்ட்டிகாரியா மற்றும் தோல் படை (எக்சிமா எனப்படும் அட்டாப்பிக் டெர்மட்டைட்டிஸ்) இவ்வகை சரும ஒவ்வாமைகளுக்கு தகுந்த சிகிச்சை பெறவும்.

பூச்சிக் கடி: குழந்தைகளின் சருமத்தில் பெரும்பகுதி வெளியில் தெரியும்படி இருப்பதால், பூச்சிகள் கடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. சில குழந்தைகளின் சருமம் அதிக உணர்திறன் கொண்டதாக இருக்கும், அவர்களுக்கு கொசு கடித்தால் கூட அதிக எதிர்விளைவுகள் உருவாகும். அவர்கள் வெளியே சென்று விளையாடும்போது வேறு பூச்சிகளும் கடிக்க வாய்ப்புள்ளது, குறிப்பாக மாலை நேரத்திற்குப் பிறகு வெளியே சென்று விளையாடினால் இதற்கான வாய்ப்பு இன்னும் அதிகம். பெரும்பாலான பூச்சிக் கடிகளுக்கு, கடிபட்ட இடத்தில் லேக்டோகேலமைன் லோஷனைத் தடவினாலே நிவாரணம் கிடைக்கும்.
முகப்பரு மற்றும் பிற கட்டிகள்: முகப்பருக்களும் கட்டிகளும் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள குழந்தைகளுக்கு, வெப்பத்தாலும் வியர்வையாலும் அவை இன்னும் மோசமாகும்வியர்ப்பதாலும் சன்ஸ்கிரீன் அதிகம் பயன்படுத்துவதாலும் கூட சருமத்தில் இவ்வகைப் பிரச்சனைகள் ஏற்படலாம்.
நாள்பட்ட சருமப் பிரச்சனைகள்
நாள்பட்ட சருமப் பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு, கோடைக்காலத்தில் அறிகுறிகள் இன்னும் மோசமடையும், உதாரணமாக சில அறிகுறிகள்:
வளையப் படை (டினியா) – நாள்பட்ட பூஞ்சான் தொற்று
தோல் படை
எண்ணெய்ச்சுரப்பு மிகைப்பு சரும அழற்சி
நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு, கோடைக்காலத்தில் சருமப் பிரச்சனைகள் வரும் வாய்ப்பு அதிகம்.
வீட்டில் சுய பராமரிப்பு
பெரும்பாலான சருமப் பிரச்சனைகள் தீங்கற்றவை, சில நாட்களில் தானாகவே அவை சரியாகிவிடும். எனினும், கோடை விடுமுறையின்போது உங்கள் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்புகள் எதுவும் ஏற்படாதவண்ணம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.
தளர்வான காட்டன் ஆடைகள் – குழந்தைகளுக்கு தளர்வான காட்டன் ஆடைகளையே உடுத்த வேண்டும், அவைதான் நல்ல காற்றோட்டத்தை அனுமதிக்கும்.
குழந்தைகள் நிறைய நீர் அருந்த வேண்டும்
அடிக்கடி குளிர்நீரில் குழந்தைகளை குளிக்க வைக்க வேண்டும்
வெளியே அதிக வெப்பமாக இருந்தால், அதிக நேரம் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு தோல் தடிப்புகள் ஏதேனும் இருந்தால், மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு கிரீம்கள், பவுடர் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்
தோல் தடிப்பு உள்ள இடங்களில் குழந்தைகள் சொறிந்துவிடாமல் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும், அப்படிச் செய்தால் நோய்த்தொற்று ஏற்படலாம்
எச்சரிக்கை
குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் ராஷஸ் தானாக குணமாகாவிட்டால், வலி, வீக்கம், சிவத்தல், சீழ், காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றின் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரிடம் செல்லவும்.