உழைப்பிற்கு ஏற்ற உணவை சாப்பிடும் முறையை கடைப்பிடிக்க ஆரம்பித்தாலே போதுமானது உடல் எடையை கட்டுப்படுத்த. இன்று பெரும்பாலும் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது உட்கார்ந்தே வேலை செய்யும் முறை தான்.
ஒரு அங்குலம் கூட நகராமல், காலை முதல் மாலை வரை ஒரே இடத்தில் அமர்ந்தவாறு வேலை செய்கிறோம். ஆனால், உணவு மட்டும் அதே அளவு கலோரிகள் குறையாமல் உட்கொள்கிறோம். இதனால் கலோரிகள் கரையாமல் உடலில் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடுகிறது. டயட் மற்றும் அன்றாட வாழ்வியல் முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதால் நீங்கள் உடல் பருமனை கட்டுபடுத்த முடியும்…..
நீராகாரம்
நாள் முழுதும் சரியான அளவு தண்ணீர் பருகுவது உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. முக்கியமாக சிட்ரஸ் ஜூஸ் போன்றவை. இவை எப்போதும் வயிறு நிறைந்த உணர்வை தரவல்லது. இதனால் நீங்கள் அதிகமாக உட்கொள்ளும் முறையை தவிர்க்க முடியும்.
ஷேக் டயட்
ஷேக் ட்ரிங்க்ஸ் பருகுவது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் தந்து, உடல் எடை அதிகரிக்காமலும் இருக்க உதவுகிறது. மேலும் இதனால் உடலில் அளவுக்கு அதிகமான கலோரிகள் சேராமல் பாதுகாத்து, உடல் பருமன் அடையாமல் இருக்கலாம்.
படிகள்
லிப்ட், எலிவேட்டர் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்த துவங்குங்கள். உட்கார்ந்தே வேலை செய்யும் முறையை கடைபிடிக்கும் நாம் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதால் மட்டும் தான் கலோரிகளை கரைக்க முடியும்.
வார இறுதியில் உடற்பயிற்சி
வாரம் ஐந்து நாள் வேலைக்கு செல்பவர்கள் நேரம் கிடைக்கவில்லை என உடற்பயிற்சியில் ஈடுபடுவதில்லை. குறைந்தபட்சம் வார இறுதியிலாவது உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் உடல்பருமன் அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும்.
ஏழு மணிக்கு இரவு உணவு
கட்டாயம் இரவு ஏழு மணிக்கே இரவு உணவை உட்கொள்ளும் முறையை கடைப்பிடிக்க வேண்டும். உணவருந்திய பிறகு குறைந்தபட்சம் 1-2 மணிநேரம் கழித்து தான் உறங்க செல்ல வேண்டும். இதனால் கலோரிகளை கரைக்க முடியும். இல்லையேல் இரவு உணவருந்திய கலோரிகள் முழுமையாக கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கும்.
பசியுடன் இருக்க வேண்டாம்
பசியுடன் இருந்து சாப்பிட வேண்டாம். இதனால் நீங்கள் அதிக கலோரிகளை உட்கொள்ள நேரிடலாம். எனவே, பசிக்கும் முன்னரே சரியான நேரத்திற்கு உணவருந்தும் முறையை கடைப்பிடிக்க துவங்குங்கள்.
கலோரி அறிந்து உண்ணுங்கள்’
பெரும்பாலும் நாம் மூளைக்கு வேலை தந்து தான் இப்போது உழைத்து வருகிறோம். உடல் உழைப்பு குறைவாக இருக்கும் போது கலோரிகள் அதிகம் உட்கொண்டால் கண்டிப்பாக உடல் எடை அதிகரிக்க தான் செய்யும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!