Home சூடான செய்திகள் தொப்புள் காமம்

தொப்புள் காமம்

1221

1002103_487793591312974_717905973_nதொப்புள் அடையாளக் காமம் (Navel fetishism) என்பது பிறரின் தொப்புளையோ அல்லது தனது தொப்புளையோ காமநோக்கில் பார்த்து இன்புறுவது ஆகும்

காரணங்கள்

இந்த காம உணர்வானது குழந்தைப் பருவத்திலேயே தோன்ற ஆரம்பிக்கலாம் அல்லது முதிர்பருவத்தில் தோன்றலாம்.

பெண்

இந்த உணர்வு பெண்களுக்கு தோன்ற ஒரு காரணம், காம உணர்வைத் தூண்டும் உடல் பகுதிகளில் தொப்புளும் ஒன்றாகும். தந்த்ரா என்பதில் உள்ள “தந்” உடலிலுள்ள சக்தியையும், “த்ரா”, அதைக் கடத்தும் தன்மையையும் குறிக்கும். தாந்திரீகத்தில் தொப்புள் முக்கிய இடம்பெற்றது.பெண்களுக்கு ஏற்படும் உச்சக்கட்ட இன்பத்திற்கு மூல காரணமாய் இருப்பது தொப்புள் என்றும்,இது ஸ்தனத்திற்கும்,யோனிக்கும் இடையில் பாலமாய் இருந்து காமத்தை தூண்ட வல்லது என்கிறது காம சூத்திரம்.

ஆண்

இந்த உணர்வு ஆண்களுக்கு தோன்ற காரணம், ஆண்களில் சிலர் பெண்ணின் தொப்புளை பெண் இனச்சேர்க்கை உறுப்பின் மாதிரியாக கருதுகின்றனர்.

கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகைகள்

தொப்புளை விரலால் வருடுவது கிளர்ச்சியை ஏற்படுத்தும்.

செயல்பாட்டுக் காமம்

ஆண் பெண் இரு பாலரில் சிலருக்கு தொப்புளில் முத்தமிடுவது, தொப்புளை விரல், நுனி நாக்கு, மலர் இதழ்கள் அல்லது பறவை இறகினால் வருடுவது போன்ற செயல்கள் கிளர்ச்சியை ஏற்படுத்தும். தொப்புளில் தேன், மது போன்ற திரவியங்களை ஊற்றி உறிஞ்சிவதும் கிளர்ச்சியை ஏற்படுத்தும்.சிலர் இத்தகைய செயல்களை கற்பனை செய்து சுய இன்பம் கொள்வர்.

பார்வைக் காமம்

சிலருக்கு இத்தகைய செயல்களை பார்ப்பது கிளர்ச்சியை ஏற்படுத்தும். மேலே கூறப்பட்ட செயல்களை காம உணர்வுகளைத் தூண்டும் வகையில் காட்சிப்படுத்தி வெளிவரும் பாலுணர்வுக் கிளர்ச்சிய நிகழ்படங்களை பார்ப்பதும் கிளர்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொப்புளை பார்ப்பது மட்டுமே கிளர்ச்சியை ஏற்படுத்தும். இதைப் பார்வைக் காமம் என்று குறிப்பிடுவர்.

பெண்களின் தொப்புள் பல வடிவங்களில் இருந்தாலும் ஆங்கில எழுத்து “T” போன்ற செங்குத்தான வடிவம் கொண்ட தொப்புளே மிக கவர்ச்சியானது என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

இளம் பெண்கள்,இடை ஆட்டக்களைஞர்கள்,நடிகைகள் மற்றும் பாப் இசை பாடகிகள் போன்றோர் தொப்புளில் தோடு மாட்டிக்கொள்கின்றனர்.இவைகளும் தொப்புளை நோக்கி பார்வைகளை ஈர்க்க காரணமாகின்றது.

ஆண்களுக்கு தொப்புளை வெளிகாட்டும் பிக்கினி (Bikini), லோ ஹிப் ஜீன்ஸ் போன்ற உடைகளில் பெண்களை காண்பதும்,பெண்களுக்கு மேல்சட்டை உடுத்தாத ஆண்களை காண்பதும் காம உணர்வை தூண்டும்.

பாலின்ப இலக்கியம்

தொப்புளை மைய்யபடுத்தியோ அல்லது தொப்புளை காம நோக்கில் அடையாளப் படுத்தியோ எழுதப்படும் இலக்கிய காமக் கதைகள் மற்றும் கவிதைகளும் கிளர்ச்சியை ஏற்படுத்தும்.உதாரணமாக சாங் ஒப் சாலமன் என்னும் யூத மொழி பைபிள் நூலில் சுலைமி என்னும் பெண்னை வர்ணிக்கும்போது “thy navel is like a round goblet, which wanteth not liquor”(7:2) என்று குறிப்பிடப்படுகிறது. ”உனது தொப்புள் திராட்சை ரசம் நிறைந்த வட்டக்கலசம் போலிருக்கிறது” என்பது இதன் பொருளாகும்.

பிரபலங்கள்

தொப்புளின் மீது ஈர்ப்பு கொண்ட பிரபலங்கள் சில கிழ்வருமாறு,

பிரபல அமெரிக்க இசைத்தட்டு கலைஞரும் நடிகையுமான மடோனா மே 1985ல் ஸ்பின் என்னும் அமெரிக்க இதழுக்கு கொடுத்த பேட்டியில் “என் தொப்புள் என் பிரியத்துக்குரியது.எனக்கு மிகவும் கச்சிதமான.உட்புறத் தொப்புள் அமைந்துள்ளது.நான் எனது தொப்புளில் எனது விரலை பதித்தால் உடலின் மத்திய பகுதியின் நரம்பு ஒன்றில் கிளர்ச்சி ஏற்பட்டு என் முதுகில் பாய்கிறது.சுமார் 100 தொப்புள் படங்களில் இருந்தும் கூட நான் எனது தொப்புளை சரியாக கண்டறிவேன்.” என்று கூறியுள்ளார்.

சிலி நாட்டை சேர்ந்த எழுத்தாளர் இசபெல் அல்லெண்டே (Isabel Allende) தனது புத்தகம் ஒன்றில்,”எனக்கு எனது காதலரின் தொப்புளில் பச்சை முட்டையை இட்டு வெட்டிய வெங்காயம்,உப்பு,மிளகு,எலுமிச்சை மற்றும் டோபாஸ்கோ சாஸ் உடன் உண்ண ஆசை” என்று கூறியுள்ளார்.

தெலுங்கு திரைப்பட இயக்குனர் K.ராகவேந்த்ர ராவ் பெண்களின் தொப்புள் மீது ஆர்வம் கொண்டவர்.அவரது திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் கதாநாயகிகளின் தொப்புளில் பூக்கள் மற்றும் பழங்களை போடுவது,தண்ணீர்,ஐஸ் கட்டி போன்றவற்றை சொட்டவிடுவது போன்ற காட்சிகள் எப்பொழுதும் இடம்பெறும்.சக தெலுங்கு பட இயக்குனர் தாசரி நாராயண ராவ் விழா ஒன்றில்,”ராகவேந்த்ர ராவ் தன் திரைப்படங்களில் கதாநாயகிகளை கலை நயத்துடன் காட்சி படுத்துவார்.குறிப்பாக அவர்களின் தொப்புள் மிக அழகாக காட்சிபடுத்தபடும்” என்று கூறியுள்ளார்.