Home ஆரோக்கியம் தூங்கும் போது குறட்டையா? அலட்சியம் வேண்டாம்

தூங்கும் போது குறட்டையா? அலட்சியம் வேண்டாம்

25

download (4)குறட்டை என்பது சாதாரண விஷயம் அல்ல, அது உடலில் ஏற்படும் ஏதேனும் அசௌகரியத்தின் அடையாளமாகும்.
தூங்கும் போது பலரும் குறட்டை விடுவார்கள், இதனால் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தான் பெரிய தொந்தரவாக இருக்கும்.

நாள் முழுவதும் வேலை பார்த்து களைத்த மனிதன், வீட்டிற்கு வந்து படுத்து தன்னை மறந்து தூங்கும் போது, அவனிடமிருந்து குறட்டை சத்தம் எழும்.

காலையில் குறட்டை பற்றி அவர்களிடம் கேட்டால் நான் குறட்டை விட்டேனா என்று கேட்பார்கள்.

குறட்டை என்பது சாதாரண விஷயம் அல்ல. அது உடலில் ஏற்படும் ஏதேனும் அசௌகரியத்தின் அடையாளமாகும்.

குறட்டை ஏன் வருகிறது?

ஒருவர் தூங்கும் போது அவரது மூச்சுப் பாதை பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ அடைத்துக் கொள்கிறது.

அந்த நேரத்தில் வாய் வழியாக சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு வாய் வழியாக மூச்சு விடும் போது உள்நாக்கு வேகமாக அசைந்து பேலர் மீது உரசுகிறது.

இந்த அதிர்வு சத்தத்தையே நாம் குறட்டை என்கிறோம், குறட்டை என்பது ஒரு நோய் இல்லையென் றாலும் இதனால் வரும் பக்கவிளைவுகள் மிகவும் அதிகம்

விளைவுகள்

தூங்கிக் கொண்டிருக்கும் போது இதய பாதிப்பு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவை ஏற்பட பெரும்பாலும் இதுவே காரணமாக அமைகிறது.

அதிக உடல் எடை காரணமாக, வயிறு அல்லது கழுத்து அல்லது தொண்டைப் பகுதியில் அதிக கொழுப்பு சேர்ந்து விடும்.

இதனால், நுரையீரலால் நாம் ஆக்ஸிஜனை உள்ளிருக்கும் போது தேவையான அளவுக்கு விரிவடைய இயலாமல் போகும். இது, மூச்சை உள்ளிழுப்பதிலும், வெளியேற்றுவதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

இந்த சமயங்களில், ஒருவரது ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைந்து, கார்பன் டை ஆக்ஸைட் அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட நேரிடுகிறது.

எனவே, குறட்டை தானே என்று எண்ணாமல், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.