Home அந்தரங்கம் தூங்கி வழியாதீங்க! உடலுறவில் மகிழ்ச்சி இருக்காது!!

தூங்கி வழியாதீங்க! உடலுறவில் மகிழ்ச்சி இருக்காது!!

33

நம்மில் எல்லோருமே மகிழ்ச்சியான வாழ்க்கையைத்தான் விரும்புகிறோம். ஆனால் எல்லோராலும் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. அதற்குக் காரணம் நாம் செய்யும் சின்னச் சின்ன தவறுகள்தான். புதிதாக திருமணமான தம்பதியருக்குள் எத்தனையோ எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் அதை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் தடுக்கும் வில்லன்கள் நம்முள்ளேயேதான் இருப்பார்கள். அந்த வில்லன்களை கண்டறிந்து அவர்களை முறியடித்து விட்டோமானால் மண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது என்கின்றனர் நிபுணர்கள்.

அடிக்கடி லேட்டாகுதே

திருமணம் ஆன புதிதில் சினிமா, ஹோட்டல் என்று அடிக்கடி வெளியில் சென்று வரவேண்டும் என்ற ஆசை ஏற்படுவது இயல்பு. ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அலுவலக வேலை அமைந்து விடும். சாயந்திரம் கிளம்பி ரெடியா இரு சினிமாவுக்கு போகலாம் என்று ஆசை வார்த்தை சொல்லி விட்டு கிளம்பும் நீங்கள் மாலையில் வேலைப் பளுவினால் அந்த வார்த்தையை காக்க முடியாமல் போகும் பட்சத்தில் பிரச்சினை உருவாகிறது. என்றைக்காவது ஒருநாள், வாரத்தில் இரண்டுநாள் லேட்டானால் பரவாயில்லை தினம் லேட்டானால் வீட்டில் பூகம்பமே வெடிக்கலாம். நல்ல பணியாளர் என்று உங்கள் அதிகாரியிடம் பெயர் எடுப்பது ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் நல்ல கணவர் என்று பெயர் எடுங்களேன். அப்புறம் பாருங்கள் உங்கள் மனைவி உங்களுக்கு தகுந்தவராக மாறிவிடுவார்.

போனில் பேசிட்டே இருக்கீங்களா?

அலுவலக வேலையோ, சொந்த வேலையோ எப்பவுமே போனும் கையுமாக இருப்பது இன்றைக்கு பேஷனாகிவிட்டது. இன்றைக்கு பெரும்பாலான குடும்பங்களில் செல்போன்தான் பிரச்சினைக்கு காரணமாகிவிட்டது. கணவனும், மனைவியும் தனித் தனியே போனில் பேசிக்கொண்டே இருந்தால் தாம்பத்ய வாழ்க்கையில் விரிசல்தான் அதிகமாகும். எனவே கூடுமானவரை மனைவியுடன் இருக்கும்போதாவது செல்போனை ஆஃப் செய்துவிடுங்கள். முக்கியமாக போன் பேசியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தால் மனைவியிடம் கேட்டுக்கொண்டு, விளக்கம் அளித்துவிட்டு பேசுங்கள் நிச்சயம் உங்கள் மனைவி புரிந்து கொள்வார்.

தூங்கி வழியாதீங்க!

பணிச் சுமையினால் உடலும் மனமும் சோர்வு அடைவது இயல்புதான். ஆனால் அதையே காரணம் காட்டி மனைவியை வாட விடுவது நியாயமே இல்லை. வாரத்தில் மூன்றுநாட்களாவது மனைவியை சந்தோசப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டால்தான் தாம்பத்ய வாழ்க்கையில் உற்சாகமும், மகிழ்ச்சியும் நீடிக்கும். அதேபோல் எப்பொழுதும் ஒரே மாதிரியான உறவும் போர் அடிக்க ஆரம்பித்துவிடும் எனவே அவ்வப்போது புதிது புதிதாக முயற்சி செய்யுங்கள். அதேபோல் உறவிற்கு பின் உடனே உறங்கிப் போய்விடாதீர்கள். அது அந்த உறவின் மகிழ்ச்சியையே பறித்துவிடும். எனவே உறவிற்குப்பின் உங்கள் மனைவியுடன் சிறிதுநேரம் பேசுங்கள். அது உங்கள் மீதான நேசத்தை அதிகரிக்கும்.

நண்பர்களோடு அதிக நேரம் செலவிடுகிறீர்களா?

குடும்பவாழ்க்கையில் பிரச்சினை எழுவதற்கு மிக முக்கிய காரணம் நண்பர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம். நண்பர்கள் அவசியம்தான். முக்கியத்துவம் வாய்ந்தவர்தான். அதேசமயம் நம்மை நம்பி வந்த மனைவிக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அப்பொழுதுதான் மணவாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். ஒரு சிலர் நள்ளிரவு வரை நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவார்கள். பீர், டிரிங்க்ஸ் என சாப்பிட்டு விட்டு அதிகம் நேரம் கழித்துதான் வீட்டுக்கே வருவார்கள். இது மிகவும் மோசமான பழக்கம்.

தாம்பத்ய வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும் எனவே இந்த கெட்டப்பழக்கங்களை விட்டு ஒழியுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் மண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.