இந்தக் காலத்துப் பெண் குழந்தை கள் எட்டு, ஒன்பது வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். எனவே அவ ர்களுக்கு முன்கூட்டியே மாத விலக்கு என்றால் என்ன, அது வந்தது ம் என்ன செய்ய வேண்டும், அது பயப்படுகிற விஷயமல்ல என் பதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
பருவ வயதை எட்டும் போது ஏற்படுகி ற இனக் கவர்ச்சி பற்றியும், அது இயல் பான ஒன்றே என்றும் சொல்லிக் கொடு ங்கள். அதை ஒரு சீரியஸான விஷய மாக நினைத்துக் கொள்ள வேண்டியதி ல்லை என்பதை விளக்குங்கள்.
பருவ வயதை எட்டியதும் உங்கள் மக ளுக்கு ஆண்-பெண் உறவு பற்றி விளக் கலாம். அதில் அசிங்கப்படவோ, தயங்க வோ வேண்டி யதில்லை. ஆபத்தான சூழ் நிலைகளிலிருந்து அவள் தன்னை க் காப்பாற்றிக்கொள்ள அந்த அறிவுரை அவளுக்கு முக்கியம்.
படுக்கையில் சிறுநீர் கழித்தல்,அளவுக்கதிமாக உடல் வியர்த்தல், மனச்சோர்வு, பசியின்மை, பயம்,தூக்கமின்மை, படிப்பில் கவனமி ன்மை போன்ற அறிகுறிகள் உங்கள் மகளிடம் தென்பட் டால் அலட் சியம் செய்யாதீர்கள். அவள் பாலியல் ரிதியான தாக்குதலுக்கு உட்பட்டிருந்தா லும் கூட இந்த அறிகுறிகள் இருக்கக் கூடு ம்.
தவிர்க்க முடியாமல் உங்கள் மகள் அப்ப டி ஏதேனும் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகி இருந்தாலும், அவளைத் திட் டாதீர்கள். என்ன நடந்தது, எப்படி நடந்தது எனப் பொறுமையாக விசாரியுங்கள். அடு த்து அவளுக்கான பாதுகாப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ளுங்கள். எதிர்கால த்தில் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறு த்துங்கள்.
திருமணத்துக்கு முன்பான செக்ஸ் ஏன் தவறானது என்றும், அது எந்தளவுக்குப் பெண்களை பாதிக்கும் என்றும், அதன் பின் விளை வுகள் என்னவென்றும் உங்கள் மகளுக்கு எச்சரிக்க வேண்டும். அதைத் தவிர்த்து ஏன் கூடாது என்பதற்கான விளக்கம் சொல்லி விட்டால் அதுவே அவர்களுக்கு விழிப் புணர்வைத் தரும்.