Home பெண்கள் திருமணத்திற்கு தயாரான பெண்ணுக்கு!

திருமணத்திற்கு தயாரான பெண்ணுக்கு!

35

மணப்பெண் அலங்காரம் என்பது நமது தமிழ் குடும்பங்களில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும். அக்காலத்தில் வாரம் இரு முறை எண்ணை தேய்த்து குளித்தல்இ வாரம் ஒரு முறை மஞ்சளுடன் தேங்காய் எண்ணை கலந்து உடல் முழுவதும்இ பூசுதல் மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு பண்டிகையை யொட்டி மருதாணி இட்டுக் கொள்ளுதல் போன்றவை அவர்களது தலைமுடிஇ முகம்இ கைகால்கள் ஆகியவற்றை எப்போதும் அழகாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

தற்கால பெண்களுக்கு படிப்புஇ வேலை மற்றும் பல வேலைகள் இருப்பதால் இவற்றுக்கெல்லாம் நேரம் கிடைப்ப தில்லை. திடீரென திருமணம் நிச்சயமான வுடன் அவர்களுக்கு தங்களை அழகுப் படுத்திக் கொள்ளும் எண்ணம் அதிகமாகி றது. 6 மாதம் முன்னதாகவே திருமணம் நிச்சயமான பெண்களுக்கு அவர்களை தயார் செய்து கொள்ள நிறைய நேரம் கிடைக்கிறது. மேலும் 3 மாதம்இ ஒரு மாதம் என்று குறைந்த நேரத்திலும் அவர்களை தயார் செய்ய பார்லர்களில் வித விதமான விதிமுறைகளை செயல்படுத்துகின்றனர்.

முதலில் 6 மாதம் முன்னதாக என்றால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கலாம். அவர்களுக்கு முதலில் தலைமுடியை மாதம் ஒரு முறை நன்றாக ஒயில் மசாஜ் செய்து ஹென்னா கண்டிஷனர் போட்டு வரலாம். முகத்துக்கு நல்ல தரமான பிளீச்சிங் மற்றும் பழ பேஷியல் செய்து முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் பெடிக்யூர்இ மெனிக்யூர் மாதம் ஒரு முறை செய்து கொண்டே வந்தால் கல்யாண நேரத்தில் நல்ல பலன் தெரியும். இவர்கள் திருமணத்துக்கு முதல் மாதமும்இ திருமணத்துக்கு முன்பும் ஒரு கோல்டன் பேஸியல்இ பிரெஞ் பெடிக்யூர்இ மெனிக்யூர் ஆகியவற்றை செய்து கொள்வதன் மூலம் அழகிய தோற்றத்தை பெறலாம். இந்த 6 மாதம் எப்பொழுது வெளியில் சென்றுவிட்டு வந்தாலும் சுத்தமான நீரினால் முகத்தை கழுவுதல்இ வெள்ளரிப் பிஞ்சை கண்கள் மேல் வைத்துக் கொள்ளுதல் எலுமிச்சைஇ தயிர் போன்றவற்றை முகம் மற்றும் கைஇ கால்களில் தடவி வருதல் ஆகியவற்றை செய்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால் இது கூடுதல் பலனை அளிக்கும்.

இனி 3 மாதம் முன்னதாகவே தயாராக வேண்டிய மணப்பெண் முதல் மாதம் முதலே பிளீச்சிங் பேஷியல் அல்லது கோல்டன் பேஷியல் ஆகியவற்றை தவறாமல் செய்து கொள்வது நல்லது. இது முகப்பொலிவை உடனடியாக எடுத்துக் காட்டுகிறது. இது போல தலை முடியை பராமரிப்பதற்கும் சூடான எண்ணையில் மசாஜ் செய்வதோடு கூட வைப்ரேட்டர்இ ஹைபிரிகுவன்சியை உபயோகப்படுத்தி தலை முடியை பேன்இ பொடுகுஇ தொல்லை இல்லாமல் சுத்தமாக பராமரிக்க வேண்டும். இத்துடன் பெடிக்யூர் மற்றும் மெனிக்யூரையும் அவசியமாக செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் திருமணத்துக்கு முன் எந்தவிதமான தோல் பிரச்சினைஇ பொடுகுப் பிரச்சினைகளோஇ கைஇ கால்இ நகங்களின் மூலம் உண்டாகும் பிரச்சினைகளோ வராமல் தவிர்க்கலாம். திருமணத்துக்கு 4 அல்லது 5 நாட்களுக்கு சிறப்பு மணமகள் பேக்கேஜ் என்ற ஒரு வசதியை செய்து கொள்ளலாம். 3 மற்றும் 4 மணி நேரம் செலவிட்டால் மணப் பெண்ணை உச்சி முதல் பாதம் வரை தயார் செய்து விடலாம்.
முதலில் தலை முடிக்கு சிறப்பான சூட்டுப் பருவத்தில் எண்ணையில் மசாஜ் செய்து ஹென்னா கண்டிஷனர் மூலம் முடியை சுத்தமாக்கி பளபளப்பாக வைத்த பின்னர் முகத்துக்கு பிளீச்சிங் செய்தவுடன் கோல்டன் பேஷியல் செய்து முகத்தின் சதைகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக் கச் செய்யலாம். கைஇ கால்களில் உள்ள நிறத்தை அதிகரிக்க முதலில் பிளீச்சிங் செய்துஇ பிறகு வேண்டாத முடியை நீக்க வெக்சிங் செய்கிறோம். இதன் மூலம் நிறம் அதிகரிப்பது மட்டு மல்லாமல் தோலும் மிருதுவாக இருக்கும். அதன் பிறகு பெடிக்யூர்இ மெனிக்யூர் ஆகியவற்றை பிரெஞ்ச் முறையில் செய்து பாதங்களையும்இ நகங்களையும் அழகு மிளிரச்செய்யலாம். திருமணத்துக்கு முன் உடல் முழுவதையும் மசாஜ் செய்து கொள்வது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியையும்இ சுறு சுறுப்பையும் கொடுக்கும். இவை அனைத்தும் மணமகள் அலங்காரத்தில் அடங்கும்.

 
திருமணத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு கை, கால்களில் மெஹந்தி எனப்படும். மருதாணியால் போடும் டிசைன்களை இப்பொழுது பலரும் விரும்பிப் போட்டுக் கொள்கிறார்கள். மணமகள் மருதாணி அலங்காரம் என்பது முழங்கை வரை போடப்படும். ராஜஸ்தானி (இந்திய) மாதிரியாகவோ அல்லது அரேபிய டிசைனாகவோ போட்டுக் கொள்ளலாம். கறுப்பு மெஹந்தி என்று தற்போது போடும் கறுப்பு மெஹந்தி டிசைனையும் மணப்பெண் தவிர மற்றவர்கள் போட்டுக் கொள்கி றார்கள். கால்களுக் கும் கொலுசு டிசைன் முதல் காலை முற்றிலும் மூடும் ராஜஸ்தானி டிசைனையும் போட்டுக் கொள்ளலாம். தங்க கலர், சில்வர் கலர், கிலிட்டர்ஸ் ஆகியவற்றையும் வரவேற்பு நேரத்தில் போட்டுக் கொள்ளலாம்

மணப்பெண் திருமணமாவதற்கு 3 மாதத்திற்கு முன்பிருந்தாவது முறையான அழகுபராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் மணப்பெண்ணின் முக அழகானது வீடியோ, போட்டோவில் வசீகரமானதாகத் தெரியும். அரைத்தேக்கரண்டி எலுமிச்சபழ சாறுடன் சிறிது பால் சேர்த்து அத்துடன் கிளிசரின் சில துளிகள் விட்டு ஒன்றாகக் கலந்து 1/2 மணி நேரம் வைத்து விடுங்கள். பிறகு இதை எடுத்து இரவு படுப்பதற்கு முன்பு முகத்தில் நன்றாகப் பூசிக்கொள் ளுங்கள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தினமும் தவறாமல் செய்து வந்தால் உங்களது முகம் அபாரமாக பளிச்சிடும். கனிந்த தக்காளியில் சாறு எடுத்து காலை பகலில் முகம் முழுவதும் பூசி ஒரு மணி நேரம் உலரவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் தினமும் தொடர்ந்து செய்துவர முகம் சிறிது சிறிதாக நல்ல நிறத்தை அடைகிறது..

வெள்ளரிக்காயை மிக்சியில் அரைத்து சாறு எடுத்து முகம் முழுவதும் தடவி 25 நிமிடங்கள் உலரவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினாலும் முகம் பளபளப்பு பெறும்..

பாதாமை அரைத்து பாலேட்டுடன் சேர்த்து சில துளிகள் பன்னீர் விட்டு முகத்தில் தடவிக்கொண்டு அரைமணி நேரம் உலரவிட்டு கழுவினால் முகம் பளிச் என்று ஆகிவிடும். தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் என்றால் என்னவென்று கேட்பீர்கள். தயிர்கூட மிகச்சிறந்த அழகு சாதனம்தான் முகத்தில் தயிரை தடவி வர உங்கள் முகம் இளமைப் பொலிவுடன் திகழும்.. முகத்திற்கு கிரீம் லோஷன், மொய் ஸரைஸர் என்று மாற்றி மாற்றி கவனத்துடன் ஒப்பனை செய்து கொள்ளும் நாம் கழுத்தை கவனிப்பதில்லை. நன்றாக உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். முகம் பளிச் என்று இருக்கும் கழுத்து சம்மந்தமில்லாததுபோல கறுப்பாக இருக்கும். முகத்திற்கு எடுத்துக் கொள்ளும் கவனத்தை கழுத்திற்கும் எடுத்துக்கொள்வது நல்லது..

சில பெண்கள் வித விதமான உடையணிந்து முகத்தை ஒப்பனை செய்துகொண்டாலும் கைவிரல்களைப் பார்த்தால் தடிமனாகவும், சொர சொரவென்றும் பார்ப்பதற்கே விகாரமாக இருக்கும். இதற்கு காரணம் என்ன? அவர்கள் கைவிரல்களை சரியாக பராமரிக்காததுதான். சரிவர பராமரித்து அழகூட்டப்பட்ட விரல்களே உங்கள் அழகிற்கு மேலும் மெருகூட்டக்கூடியவை. வீட்டுவேலைகளின் போது உதாரணமாக பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தலின் போது கைகளில் ரப்பர் உறைகளைப் போட்டுக்கொள்வது அவசியம். உறைகளைப் பயன்படுத்துவதற்கு முன் ஏதாவது ஒரு ஹாண்ட் க்ரீம் தடவி கொள்ளுங்கள். . நகங்கள் மிகவும் மென்மையாக இருந்தால் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்து அதில் உப்பு சிறிதளவு போட்டு அதில் விரல் நகங்கள் படுமாறு சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நாட்களுக்கு செய்து வர நகங்கள் உறுதி ஆகும். கைவிரல்கள் உலர்ந்து வெடிப்புகள் வராமலிருக்க ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது கிரீம் அல்லது தேங்காய் எண்ணெய்யை கைகளில் பரவலாகத் தடவி தேய்த்துவிட்டுக் கொள்ள வேண்டும்..
உள்ளங்கைகளும், விரல்களும் மிருதுவாக இருக்க தயிரைத் தடவித் தேய்த்துக் கொள்வதாலும் விரல்கள் மென்மைப்படும். எல்லாவித பேஸ் பேக்குகளுமே கைகளுக்கு பயன்படுத்த ஏற்றவை.. கடைகளில் விற்கும் ஹோண்ட் கிரீம்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் வீட்டிலேயே கிரீம் தயாரித்துக் கொள்ளலாம். அரை அவுன்ஸ் கிளிஸரினுடன் அரை அவுன்ஸ் பன்னீர் சேர்த்து ஹேண்ட் கிரீம் தயாரிக்கலாம். அல்லது கிளிஸரினுடன் தேன், எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் ஹேண்ட் கிரீம் தாயாரிக்கலாம்..

நகங்களில் அவ்வப்போது ஒலிவ் எண்ணெய் சிறிது எடுத்து மஸாஜ் செய்து கொள்வதால் நகங்கள் பலப்படும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது க்ரீம் அல்லது ஒலிவ் எண்ணெயை எடுத்துக்கொண்டு கைவிரல்களை உருவி உருவித் தேய்த்து மஸாஜ் செய்து கொள்ள வேண்டும். விரல்களை மஸாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும். நகங்கள் உறுதியில்லாமல் அவ்வப்போது உடைந்தாலோ அல்லது தெறித்து விட்டாலோ உடம்பில் போதுமான அளவு இரும்புச்சத்து அல்லது கல்சியம் சத்து இல்லை எனத்தெரிந்து கொள்ளலாம். அதிகமாக தண்ணீர் குடிப்பவர்களுக்கு நகங்கள் உறுதியாக இருக்கும்.

 

KOBI