Home உறவு-காதல் தினமும் உங்க மனைவி எரிந்து விழுகிறாரா..? ஆண்கள் மட்டும் இதை படியுங்கள்..!!

தினமும் உங்க மனைவி எரிந்து விழுகிறாரா..? ஆண்கள் மட்டும் இதை படியுங்கள்..!!

53

இன்றைய காலத்தில் கணவன் மனைவி உறவில் பிரச்சனைகள் உருவாகுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

வீட்டிற்கு போனாலே மனைவி சும்மா எரிந்து விழுந்துக்கொண்டே இருக்கிறாள் .., என்று ஆண்கள் கூறுவதை கேட்டிருப்போம்.

இந்த பகுதியில் மனைவியை வசப்படுத்தும் தந்திரங்களை பற்றி பார்க்கலாம் வாங்க..

அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது, போனில் அழைத்து, அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை கூறி.., அதை வாங்கி வரவா என கேட்பது அவர்களை மகிழ்விக்கும்.

மனைவின் பிறந்த நாள், குழந்தைகள் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றை ஞாபகத்தில் வைத்து கொண்டு பரிசுப் பொருள்களை வாங்கி கொடுத்து அசத்துங்கள். இதன் மூலம் உங்கள் மீது மரியாதையும் பாசமும் கூடும்.

புதிதாக ஒரு டிரெஸ் மனைவி அணிந்திருந்தால்., உடனே பாராட்டு தெரிவியுங்கள். இந்த டிரஸ்-ல் நீ ரொம்ப அழகாக இருக்க என்று சொல்லி பாருங்கள். உங்களுக்கு சிறப்பான கவனிப்பு கிடைக்கும். (ஹ்ம்ம் என்ன செய்வது..? சில நேரங்களில் பொய் சொல்லித்தான் ஆகவேண்டும்.., வேறு வழியில்லை)

எப்பொழுதும் முகத்தை கோபமாக வைத்து கொள்ளாமல், அவ்வப்போது அல்லது மனைவியை பார்க்கும் போதாவது சிரித்து வையுங்கள். (அட சும்மா சிரிங்கப்பா… காசா பணமா..)

விடுமுறை நாட்களில் உங்களுக்கு தெரிந்த உணவு வகைகளை சமைத்து அசத்துங்கள். (சும்மா ஒரு நாள்.., சமையல் செய்றேன்னு சொல்லுங்க போதும்.., அதுலேயே அவங்க அசந்துடுவாங்க..)

சமையலறை சாமான்களை கவனித்து தீரும் நிலையில் உள்ள மளிகைப் பொருட்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள்.

வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒரு நாளாவது ஓட்டல், சினிமா, பார்க், பீச் என்று வெளியிடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். (கூட்டிட்டு போக முடியவில்லை என்றாலும்.., அதற்காக வருத்தப்படுற மாதிரி கொஞ்சம் நடித்து வையுங்கள்.. அவர்கள் சமாதானம் ஆய்டுவாங்க)

எப்பவுமே அம்மாவை தொந்தரவு செய்து வேலைவாங்கும் குழந்தைகளை ஒரு இரண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் வைத்து கொள்ளுங்கள்.

முடி எப்படியிருக்கு, சீவியது நல்லயிருக்கா? சட்டை மேட்சாகுதா? உனக்கு பிடிச்சிருக்கா? போன்ற கேள்விகளைக்கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளணும்.

குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள். உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்த்தால் பெரிதாக தோன்றாது.

( ஆக மொத்தம் வாயை திறக்காமல் இருப்பது ரொம்ப நல்லது என்று சொல்கிறீர்களா..? என்று கேட்பது தெரிகிறது.. வேறு வழியில்லை..)