Home குழந்தை நலம் தாய்ப்பாலை சேகரிக்கலாம்

தாய்ப்பாலை சேகரிக்கலாம்

26

b03a8205-b8b4-459d-8d1c-d6b3f237550f_S_secvpfகுழந்தை பிறந்த முதல் இரண்டு வயது வரை, தாய்ப்பால் கொடுப்பது நல்லது. குறைந்தது ஒரு வருட காலம் கொடுப்பது, குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நல்லது. தற்போது, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, மகப்பேறு விடுமுறைகள் மூன்று மாதங்களே கொடுக்கப்படுவதால், ஆறு மாதங்கள்கூட தாய்ப்பால் கொடுப்பது இல்லை.

ஆறு மாதக் குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழல் வரலாம். வேலைக்குப் போகும் பெண்கள், தாய்ப்பாலை, பாட்டிலில் சேகரித்து ஃப்ரீசரில் வைக்க வேண்டும். பாலை, குழந்தைக்குக் கொடுப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன், பால் சேகரித்த பாட்டிலை ஒடும் தண்ணீரில் (Running tap water) காண்பித்து, குளிர்ச்சியைப் போக்க வேண்டும்.

ஃப்ரீசரிலிருந்து எடுக்கப்பட்ட தாய்ப்பாலை, சூடு செய்வதோ மீண்டும் குளுமைப்படுத்துவதோ கூடாது. ஒருமுறை சேகரித்துவைத்த பாட்டிலைத் திறந்து, குழந்தைக்குக் கொடுத்துவிட்டால், மீண்டும் மூடி ஃப்ரீசரில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. நிறைய பாட்டில்கள் வாங்கிவைத்து, அதில், ஒருவேளை குழந்தைக்குத் தேவைப்படுகிற பாலை மட்டும் சேமிக்கலாம். இப்படிச் சேமிக்கும் பாலை, ஒன்றிரண்டு வாரம் வரை ஃப்ரீசரில்வைத்துப் பயன்படுத்தலாம்.