Home சூடான செய்திகள் தாம்பத்தியத்தில் தாமதம் தேவை

தாம்பத்தியத்தில் தாமதம் தேவை

30

gel-boi-tron-redfox2தாமதங்களால் லாபம் இல்லை என்பது ஒரு பொதுவான கருத்து. அதேசமயம், தாமதங்கள் பல நேர த்தில் நல்லவற்றுக்கு அடி கோலு வதை நாம் ‘பிராக் டிகல்’ வாழ்க் கையில் பார்க்க லாம்.
இது செக்ஸுக்கும் பொருந் தும். குறிப்பாக திருமண வாழ்க்கை யில் செக்ஸ் உறவு என்பது பல வற்றுக்கும் அடிப்படையாக உள் ளது. சிறந்த செக்ஸ் அடித்தளத் தை அமைத்துக் கொண்டால், திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைக்க முடியும் என்கிறார் கள் உளவியலாளர்கள்.
புதிதாக திருமணமான வர்களுக்கு செக்ஸ் ஆர் வம் மிக அதிகமாக இருக் கும், அதீதமாகவும் இருக் கும். ஆனால் ஒரேயடி யாக அதில் மூழ்கிப் போ ய்விடாமல், சற்று நிதான த்துடன் நடந்து கொண்டு, செக்ஸ் உறவை முறைப் படுத்தி செயல்பட்டால் அது மிக மிக ஆரோக்கியமான, நீடித்த திருமண பந்தத்திற்கு வழி கோலும் என்பது அவர் களின் கருத்து.

எடுத்த எடுப்பிலேயே ‘டாப்’ கியருக்குப் போனால் அது ‘ஆக்சி டன்ட்’டில் தான் போய் முடியும். அதேசமயம், படிப்படி யாக கியரை மாற்றி ‘டாப்’புக்குப் போ னால் ‘எக்சலன்ட்’ ஆக இருக்கும். திரு மணமான இளம் தம்பதியர், செக்ஸ் வாழ்க்கையில் தீவிர மாவதற்கு முன்பு, முதலில் இருவரும் ஒருவரை ஒருவர் சரிவர புரிந்து கொள்ளுதல் அவசியம். அதற்கான வாய்ப்புகளை இரு வரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சரி யான புரிதல், சிறந்த தகவல் தொடர்பு என சகலவற்றிலும் இரு வரும், நல்ல புரித லுக்கு வர வேண்டும். அதன் பிறகு செக்ஸ் வாழ்க் கையில் தீவிரமானால் அதில் வழக்கத்தை விட அதிகமான பிடிப்பும், அன் பும் இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.

இப்படி அவர்கள் சொல்வதற்கு முக் கிய காரணம் – எடுத்த எடுப்பி லேயே இருவரும் செக்ஸில் மட்டும் அதிக நாட்டம் செலுத்தினால், யாராவது ஒரு வருக்கு திருப்தி ஏற்படாமல் போய் விட்டால், அது ‘பார்ட்னர்’ மீதான வெறு ப்புணர்வை உள்ளூர வளர்த்து விடும். அது உடனடியாக வெளியே தெரியாது. ஆனால் விரைவி லேயே இருவருக் கும் செக்ஸ் வாழ்க்கையும் சரி, குடும்ப வாழ் க்கையும் சரி கசக்க ஆரம்பித்து விடும்.
எனவே இருவருக்குள்ளும் முதலில் நல்ல புரிதல் உணர்வு வர வேண்டியது அவசியம். அதன் பிறகே அன்பில் ஆழமாக வேண் டும் என்கிறார்கள் இவர்கள்.
அமெரிக்காவில் இதுதொடர் பாக ஒரு சர்வே நடத்தினர். அதி ல், செக்ஸ் உறவை தாமதப்படு த்தி, பின்னர் ஈடுபட்டவர்கள் திரு மண வாழ்க்கை (அல்லது சேர்ந்து வாழுதல்) அதிக பாச ப்பிணைப்புடன் இருப்பது தெரி ய வந்தது. அதேசமயம், அவசர கதியில் செக்ஸுக்கு முக்கியத் துவம் கொடுத்து வாழ்ந்து வருபவர்களிடையே ஒரு விதமான அதிருப்தி நிலவுவதும் தெரி ய வந்ததாம்.
வலுவான திருமண பந்தம் என்பது இருவரது மணங் களும் ஒன் றாக இணைவ தில்தான் உள்ளது. வெறு மனே உடல் சேர்க்கை யில் இது சாத்தியப்படாது. உண ர்வுப் பூர்வமாக, உள்ளப் பூர்வமாக இருவரும் முத லில் இணைய வேண்டும். நீ என்பதில் நானும் அடங் கும், நான் என்பதில் நீயும் அடங்கும் என்ற வைரமுத் துவின் வரிகளைப் போல இருவரும் ஒருவருக்குள் ஒருவர் புக வேண் டும். அதன்பிறகு உடல்களின் கூடலுக்கு முக்கியத்துவம் தர லாம். அப்போதுதான் அது உண் மையான பந்தமாக இருக்க முடியுமே தவிர, செக்ஸ் மட்டுமே முக்கி யம் என்ற எண்ணம் எழுந்தால் அது நிச்சயம், கூடலுக்குப் பிந்தைய ஊட லுக்கு வித்திடும் என்பதில் சந்தேகம் இல் லை.
சும்மாவா சொல்லி வைத்தார்கள் அந்தக் காலத்தில் – மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று. அது நிச்சயம் உண் மைதான். ஆனால் இந்த பழமொழியை பொய்யாக்க வேண்டுமானால் திட்ட மிடுத லுடன் கூடிய உறவைக் கடைபிடிப்பது அவசியம்.