நீங்கள் உங்களது உறவில் மகிழ்ச்சியாக இல்லாமல் இருக்கும் பொழுது, இரண்டு ஜோடிகள் மிகவும் மகிழ்ச்சியாக கை கோர்த்துக்கொண்டு செல்வதை பார்த்தால், எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது.
இது எவ்வளவு நாள் நிலைக்கப்போகிறதோ என்பது போன்ற எண்ணங்கள் தோன்றும்.
ஆனால், உறவு என்பது கேன்சரை போல வளர்ந்து கொண்டே செல்வது.
வெறுப்பு மற்றும் சிலவற்றை தவிர்ப்பது தான் இந்த உறவுக்கு நாம் போடும் உரம். இது எவ்வாறு சாத்தியமாகிறது.
வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் உள்ளன. ஒவ்வொரு விஷயத்தையும் சந்தோஷமாக அனுபவிக்க, சுயமாக சில மாற்றங்களும், நீங்கள் இருவரும் சில மாற்றங்களையும் செய்ய வேண்டியிருக்கும்.
இங்கே சில ஜோடிகள் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்க என்ன செய்கிறார்கள் என கொடுக்கப்பட்டுள்ளது.
1. எதிர்காலம் பற்றி பேசுதல்:
இது பொதுவான விஷயமாக தோன்றலாம். ஆனால் இது பொதுவான விஷயம் அல்ல. உங்கள் குடும்ப சூழல், செலவுகள், பொழுதுபோக்கு, நிதி நிர்வாகம், ஆசைகள், குழந்தைகளின் எதிர்காலம், பெற்றோர்களின் எதிர்காலம், வேண்டிய செலவுகள், வேண்டாத செலவுகள் என அனைத்தையும் பேசி இருவரும் சமரசமாக தீர்மானம் செய்ய வேண்டும். இந்த தீர்மானங்களில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், சந்தோஷமான தம்பதிகள் தங்களுக்குள் பிரச்சனை வளரும் முன் பேசி சமரசம் செய்து கொள்கிறார்கள். எதிர்பாராத விதமாக நடக்கும், பெற்றோரின் உடல்நலக்குறைபாடு போன்ற மாற்றங்களுக்கு தகுந்தது போல் தங்களது திட்டங்களை மாற்றியமைத்து அனைவரது நலனிலும் அக்கறை செலுத்துகின்றனர்.
2. துணையை மாற்றுதல் அல்லது கட்டுப்படுத்துதல்
உங்கள் துணையின் பழக்க வழக்கங்கள் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக அவரை நீங்கள் குறை கூறுவதை விட்டுவிட்டு அவருக்கு என்ன பிரச்சனை என்ன கேட்டு, அதில் இருந்து அவர் மீண்டு வர உதவி செய்ய வேண்டும். நீங்களே எல்லா வேலையும் செய்கிறீர்கள், அவர் சோம்பேறித்தனமாக இருக்கிறார் என்றால், அது எதனால் என்று கேட்டு சரி செய்ய வேண்டுமே தவிர, அவருக்கு சோம்பேறி என்ற பட்டம் கட்டி விட கூடாது.
3. தீர்ப்பு நெருக்கத்தை குறைக்கும்
மகிழ்ச்சியான தம்பதிகள் தாங்கள் செய்வது தான் சரி என நினைப்பதில்லை. எடுத்துக்காட்டாக, நீ ஏன் உன் அம்மாவிடன் அதை சொன்னாய்? எனக்கு அது பிடிக்கவில்லை, என்பது போன்ற கேள்விகள் உங்களது துணைக்கு தான் தவறு செய்துவிட்டேனோ என்ற எண்ணத்தை உருவாக்கும். நீங்கள் கேட்கும் கேள்விக்காக அவரது பக்கத்து நியாயத்தை அவர் சொல்ல வேண்டி இருக்கும். நீங்கள் உங்கள் பக்கத்து நியாயத்தை கூறுவீர்கள். இவை எல்லாம் உறவை பலவீனமாக்கும். இருவருக்கும் இடையே உள்ள நெருக்கும் குறையும்.
4. நம்பிக்கை
மகிழ்ச்சியான தம்பதிகள் ஒருவருக்கொருவர் நன்றி தெரிவிக்கிறார்கள். தங்களது துணை செய்யும் காரியம் நன்மைக்காக தான் என நம்புகிறார்கள். நம்பிக்கை தான் வாழ்க்கை. உங்கள் துணை ஒரு விஷயத்தை சரியாக செய்கிறார் என்று நம்புவதும் பாராட்டுவதும் உறவில் பிணைப்பை ஏற்படுத்தும்.
5. உரையாடல்கள்
மகிழ்ச்சியான தம்பதிகளுக்கு எப்படி பேச வேண்டும் எனவும் தெரிந்திருக்கிறது. எப்படி சண்டையிடுவது எனவும் தெரிந்திருக்கிறது. மெளனம் : சண்டை வரும் போது மௌனமாக இருப்பது தற்காலிக தீர்வாக இருக்கலாம். ஆனால் அது நிரந்தரமாக இருக்காது. சிறிய பிரச்சனை கூட பெரியதாக மாறிவிடும். மரியாதை: சண்டை வரும் போது பொருட்களை உடைத்தல், கெட்ட சொற்களை பயன்படுத்துதல், கத்துதல் ஆகியவை ஒரு பிரச்சனைக்கு தீர்வாகாது. ஒரு சண்டையில் உங்கள் துணையின் மீதான அன்பும், காதலும் எங்கும் போவதில்லை. அந்த அன்பை கொச்சப்படுத்தும் அளவிற்கு சண்டை போட கூடாது. ஆத்திரம் அதிகமாக இருந்தால், அது தணிந்த பின் பிரச்சனை பற்றி விவாதிக்கலாம்.
6. குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்
இதனால் தான் திருமணம் என்பது கடினமான உறவாக சொல்லப்படுகிறது. ஒரு உறவு நன்றாக அமைய சகிப்பு தன்மை, விட்டுக்கொடுத்து போதல், நம்பிக்கை ஆகியவை அவசியமாகின்றன. சந்தோஷமான தம்பதிகள் இந்த யுக்தியை தெரிந்து வைத்திருக்கின்றனர். எல்லா மனிதருக்கும் குறைகள் இருக்கின்றன. எனவே மகிழ்ச்சியான தம்பதிகள் தங்களது தவறுகளை ஒப்புக்கொள்கிறார்கள். அதற்கு பொருப்பேற்கிறார்கள். அதை தாண்டி செல்கிறார்கள்.