தானமளிக்கப்படும் விந்தணு என்பது என்ன? (What is donor sperm?)
ஒருவரின் இணையர் அல்லாத வேறொரு நபரிடமிருந்து தானமாகப் பெறப்படும் விந்தணுக்களே தானமளிக்கப்படும் விந்தணுக்கள் எனப்படும்.
கருவுறுதலுக்கான பல்வேறு சிகிச்சை முறைகளில் இவை பயன்படுகின்றன.
பெண்ணின் உடலில் கருமுட்டை கருவுறுவதற்கு கருப்பைக்குள்ளான விந்தணு செலுத்தல் (IUI) சிகிச்சை முறையில் பயன்படுத்தப்படலாம், இம்முறையில் விந்தணுக்கள் கருப்பைக்குள் ஊசி மூலம் செலுத்தப்படுகின்றன.
உடலுக்கு வெளியே பரிசோதனைக்கூடத்தில் வைத்து கருமுட்டையை கருவுறச் செய்யவும் இது பயன்படுத்தப்படலாம். இது செயற்கைக் கருத்தரிப்பு (IVF) எனப்படுகிறது.
Donor Sperm
தானமளிக்கப்பட்ட விந்தணு எப்போது தேவைப்படுகிறது? (When is donated sperm required?)
பின்வரும் சூழ்நிலைகளில், தானமளிக்கப்படும் விந்தணுக்களைப் பயன்படுத்தி அளிக்கப்படும் சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படலாம்:
உங்கள் இணையரின் விந்தணுவின் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாக உள்ள நிலையில். .
உங்கள் இணையருக்கு விந்தணுக்கள் இல்லாமல் அல்லது குறைவான விந்தணுக்களே இருக்கும் நிலையில். .
இணையரின் விந்தணுக்களில், கருத்தரித்தலைத் தடுக்கக்கூடிய ஏதேனும் குறைபாடுகள் இருக்கும் நிலையில். .
உங்கள் இணையருக்கு இருக்கும் ஏதேனும் நோய் கருவில் உண்டாகும் குழந்தைக்கும் கடத்தப்பட அதிக வாய்ப்பிருக்கும் நிலையில். .
உங்கள் இணையர் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தால். .
நீங்கள் தனியாக வாழும் பெண்மணியாக இருந்து, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால். .
நீங்கள் பெண் ஓரினச்சேர்க்கையாளராக இருந்து, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால். .
தானமளிக்கப்படும் விந்தணுக்களைப் பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் முன்பு தெரிந்துகொள்ள வேண்டியவை (Things to know while deciding to get a donor sperm)
விந்தணுக்களை தானமாகப் பெற்று கருத்தரிப்பது என்று நீங்கள் முடிவு செய்யும் முன்பு, ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவாக்கிக்கொள்ள வேண்டும். அது என்னவெனில், உங்களுக்குத் தெரிந்த நபரிடமிருந்து விந்தணுக்களை தானமாகப் பெற விரும்புகிறீர்களா அல்லது தெரியாத நபரிடமிருந்து பெற விரும்புகிறீர்களா என்பது.
நீங்கள் தனியாக வாழும் பெண்ணாக அல்லது பெண் ஓரினச்சேர்க்கையாளராக இருந்து, தெரிந்த ஒரு நபரிடமிருந்து விந்தணுக்களை தானமாகப் பெற முடிவு செய்தால், நீங்கள் வசிக்கும் பகுதிக்கான சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பற்றித் தெரிந்துகொண்டு அவருக்கு ஏற்ப முடிவு செய்யவும்.
விந்தணு வங்கியில் இருந்து பெறுதல் (Getting sperms from a bank)
விந்தணு வங்கியில் இருந்து, விந்தணுக்களைப் பெற முடிவு செய்தால், விந்தணுக்களை வழங்கும் நபர் பற்றிய அடிப்படை விவரங்களை விந்தணு வங்கி உங்களுக்கு வழங்கும். அவற்றில் பின்வரும் தகவல்களும் உள்ளடங்கும்:
இனம் சார்ந்த பின்புலம்
உடல் தோற்றம்
கல்வி
தொழில்
மருத்துவ நிலைகள்
இந்தத் தகவல் முக்கியமானதாகும், இதை வைத்து உங்கள் இணையரை ஒத்த நபரை நீங்கள் தானம் அளிப்பவராகத் தேர்ந்தெடுக்கலாம்.
விந்தணு தானம் வழங்குபவருக்கான அறிவுரைகள் (Guidelines for sperm donor)
யார் விந்தணுக்களை தானம் வழங்கலாம் என்பதற்கென சில திட்டவட்டமான அறிவுரைகள் உள்ளன. ஒருவர் தானமாக அளிக்கும் விந்தணுக்களில், நோய்த்தொற்றுகள் உள்ளதா, HIV உள்ளிட்ட மரபியல் பிரச்சனைகள் உள்ளதா என மாதிரிகள் சோதிக்கப்படும். விந்தணுக்கள் உறைய வைத்து ஆறு மாதங்கள் சேமிக்கப்படும். அந்த மாதிரிகள் பயன்படுத்தப்படும் முன்பு தானமளிக்கும் நபருக்கு HIV பரிசோதனை செய்யப்படும்.
ஆலோசனை (Counselling)
தானமளிக்கப்படும் விந்தணுக்களைப் பயன்படுத்தும் செயல்முறையை நீங்கள் தொடங்கும் முன்பு, உங்கள் இணையருடனும் ஒரு தேர்ந்த ஆலோசகருடனும் கலந்து பேச வேண்டியிருக்கலாம். தானமளிக்கப்படும் விந்தணுவைப் பயன்படுத்தி கருத்தரிப்பது என்று நீங்கள் முடிவெடுக்கும்போது, உணர்ச்சிரீதியான பல சிக்கல்கள் ஏற்படலாம், உங்கள் உணர்வுகள், சந்தேகங்கள், கவலைகளைப் பற்றி ஆலோசனை நிபுணருடன் பேசுவது மிகவும் உதவியாக இருக்கும்.
தானமளிக்கப்படும் விந்தணு மூலம் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் (What are the chances of having a baby with donor sperm?)
கருமுட்டையைப் பயன்படுத்தி வழங்கப்படும் பிற சிகிச்சை முறைகளைப் போலவே, இந்த முறையிலும் நீங்கள் வயது குறைவானவராக இருக்கும்போது (35க்குக் குறைந்த வயது) கருத்தரிப்பு வெற்றிகரமாக நடைபெற வாய்ப்புகள் அதிகம்.
பெண்ணின் வயதைப் பொறுத்து, வெற்றி வாய்ப்பின் விகிதம் மாறுபடும்.
35 வயதிற்குக் குறைவாக உள்ளவர்களுக்கு, வெற்றி வாய்ப்பு சுமார் 14% உள்ளது
35-39 வயதினருக்கு வெற்றி வாய்ப்பு 11% உள்ளது
40-42 வயதினருக்கு வெற்றி வாய்ப்பு 4-5% உள்ளது