Home சமையல் குறிப்புகள் டேஸ்டியான மட்டன் கீமா புலாவ்

டேஸ்டியான மட்டன் கீமா புலாவ்

24

Captureதேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – 2 கப்
கொத்துக்கறி – 400 கிராம்
தயிர் – 1 கப்
ப.மிளகாய் – 5 (காரத்திற்கு ஏற்றபடி)
வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்
இலவங்கம் – ஐந்து
ஏலக்காய் – ஐந்து
மிளகு – அரை டீஸ்பூன்
பாதாம், பிஸ்தா, காய்ந்த திராட்சை – தேவைக்கு
குங்குமப்பூ – அரை டீஸ்பூன்
நெய் – 50 கிராம்
உப்பு – தேவைகேற்ப

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

* கொத்துக்கறியை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மிளகு, ஏலக்காய், லவங்கம் போட்டு தாளித்த பின் நறுக்கிய ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போன வதக்கியவுடன் தயிர், பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ், குங்குமப்பூ சேர்த்து, 5 நிமிடம் வதக்கி பின்னர் சுத்தம் செய்த கீமாவை சேர்த்து வதக்கவும்.

* போதுமான உப்பு சேர்க்கவும். தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் கொத்துக்கறி சேர்த்து 5 விசில் வந்ததும் இறக்கி வைக்கவும்.

* ப்ரஷர் போனதும் திறந்து, பாசுமதி அரிசியை சேர்த்து நான்கு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில், 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து அடுப்பை அனைக்கவும்.

* ப்ரஷர் போனதும் மூடியை திறந்து, ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவை பரிமாறவும்.

* இதற்கு வெங்காய பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.