Home பெண்கள் தாய்மை நலம் டெலிவரிக்கு பின் வயறு இறுக உதவும் exercise

டெலிவரிக்கு பின் வயறு இறுக உதவும் exercise

24

பெரும்பாலான பெண்களுக்கு டெலிவரிக்கு பின் வயறு தொல தொளா என்றாகிவிடும். முன் போல் நல்ல இறுகிய வயறு வேண்டுவோர் கீழ்க்கண்ட exercise டாக்டரின் ஆலோசனைக்கு பின் செய்யலாம். காலை வெறும் வயிற்றில் செய்தால் சுலபமாக இருக்கும். விரும்புவோர் காலை மாலை இரு வேளையும் செய்யலாம். தொடர்ந்து 3-6 மாதங்கள் செய்தால் வயறு நன்கு இறுகி வரும். அதன் பின்னும் தொடர்ந்து செய்தால் ரொம்பே நல்லது. என்ன ஒரு 5 நிமிஷம் தானே. செய்து தான் பாருங்களேன்!

Exercise 1:

1.தரையில் மல்லாக்க படுத்து கொள்ளவும்.
2. கால் முட்டியை மடக்கி பாதங்கள் தரையில் படுமாறு காலை inverted “V ” போல் மடக்கி கொள்ளவும்.
3. கை பாதத்தை (Palm ) அடி வயற்றின் மேல் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து கொள்ளவும்.
4. இப்பொழுது வயிற்றை மெதுவாக உள் இழுத்து இறுக்கவும். 6 வினாடிகள் அப்படியே வைத்து இருந்து பின் மெதுவாக வயிற்றை ரிலீஸ் செய்யவும்.
5. இது போல் 5 முறை செய்தால் போதும்.

Exercise 2:

1.தரையில் மல்லாக்க படுத்து கொள்ளவும்.
2. கால் முட்டியை மடக்கி பாதங்கள் சுவற்றை நோக்கி வைத்து கொள்ளவும்.
3. மெதுவாக சைக்கிள் ஓட்டுவது போல் கால்களை முன்னும் பின்னும் நன்கு நகர்த்தவும். இது போல் 20 முறை செய்வவும். பின் கால்களை இறக்கி ரெஸ்ட் செய்யவும்.
4. இன்னொரு முறை ஸ்டேப் 3 (20 முறை cycling) repeat செய்வவும்.

அவளோ தான்!!!. செஞ்சு பாருங்க .