டீன் ஏஜ் பெண்கள் தங்களை அழகுபடுத்தி கொள்ள பல விஷயங்கள் உள்ளன. இருப்பினும் என்ன செய்யலாம் என்பதற்கு இதோ சில டிப்ஸ்.
டீன் ஏஜ் பெண்கள் பெரும்பாலும் அழகாக இல்லை குட்டையாக இருக்கிறேன், தலைமுடி நீளமாக இல்லை, பற்கள் வரிசையாக இல்லாமல் துருத்திக் கொண்டு இருக்கின்றன, குண்டாக இருக்கிறேன், முகபருக்கள் அதிகமாக உள்ளன போன்ற பிரச்சினைகளால் தான் மிகவும் கவலையடைகின்றனர்.
இந்த பருவத்தில் தங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை தெளிவாகத் தெரிந்து கொண்டு, தங்களுடைய உடல்நல பராமரிப்புக்குத் தேவையான பொறுப்பையும், வழிமுறைகளைம் சுயமாக வளர்த்துக் கொண்டாலே போதும். பிரச்சினைகளில் இருந்து சுலபமாகத் தப்பி விடலாம்.
நிறைய பெண்கள் அதிகம் சாப்பிடுவதில்லை. அதிலும் குறிபாக டீன்ஏஜ் வயதுகளில் உள்ளவர்கள் `ஸ்லிம்`மாக இருந்தால்தான் அழகு என நினைத்து பட்டினி கிடக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் ரத்த சோகை போன்ற நோய்க்கு ஆளாகின்றனர்.
அதனால் சத்தான காய்கறிகள், பழங்கள் சாப்பிட அவர்களே பழக்கபடுத்திக் கொள்ள வேண்டும். உயரமாக இல்லாமல் குட்டையாக இருக்கிறோம் என்ற கவலை சிலருக்கு வரும். இது இவர்களே தானாக வரவழைத்துக் கொண்ட கவலைதான். உயரம் குறைவாக இருபதற்கு ஹார்மோன் கோளாறு, உணவுபற்றாக்குறை என பல காரணங்கள் இருக்கின்றன.
சிலருக்கு வளர்ச்சி தள்ளி போவதும் உண்டு. இவர்கள் சில வருடங்கள் சென்றபின் வேகமாக வளர்ந்து, தங்களின் சராசரி உயரத்தை அடைவர். பருவ வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவர்களுக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம் பெற்றோர்கள் பேச வேண்டும். பேச கூச்சமுள்ள பெற்றோர் அது தொடர்பான புத்தகங்களை அவர்களுக்கு படிக்கத் தரலாம்.
நல்ல மனதே நல்ல ஆசான். நல்லதையே சிந்தியுங்கள் நல்லதே செய்யுங்கள் , பெண்மை ஒருபோதும் தோற்காது.