வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றுத் தந்த தி டர்ட்டி பிக்சர் படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது.
இந்திப்படம் பெரும் வெற்றி பெற்ற டர்டி பிக்சர், மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.
திரையுலகில் அவர் பட்ட கஷ்டங்கள், ஏமாற்றங்கள் இதில் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது.
ஏக்தா கபூர் தயாரித்த இந்தப் படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. வித்யாபாலன் இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அப்படத்தை வேறு மொழிகளில் ரிலீஸ் செய்யவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
இதற்கிடையில் டர்டி பிக்சர் படத்தை ஒளிபரப்ப பிரபல சேனல் ஒன்று தயாரானது. இதற்கான விளம்பரங்களும் செய்யப்பட்டன. பகலிலும் இரவு 8 மணிக்கும் இப்படம் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசு திடீரென டி.வி.யில் டர்டி பிக்சர் படத்தை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது. படத்துக்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் அளித்துள்ளது. 59 காட்சிகளில் சென்சார் செய்யப்பட்ட படம் இது. எனவே பகலிலும், இரவு 8 மணிக்கும் படத்தை ஒளிபரப்பகூடாது என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தொலைக்காட்சி நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.