Home ஆண்கள் சைக்ளிங்கும் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியமும்

சைக்ளிங்கும் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியமும்

27

சைக்ளிங் செய்வது உடற்பயிற்சியின் புத்துணர்வூட்டும் ஆற்றல்மிகு வடிவமாகும். எனினும், ஆண் சைக்கிளிஸ்டுகள் அமருமிடத்தில் முன்பகுதியில் அழுத்தம் ஏற்படுவதன் காரணமாக புரோஸ்டேட் பிரச்சினைகள் உட்பட பல சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு இது காரணமாகி விடுமோ என கவலை கொள்கிறார்கள். இது போன்ற கவலைகள் சைக்ளின் நேரத்தில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும் பிறப்புறுப்புகள் அல்லது அது தொடர்புடைய பகுதிகளில் (ஆசனவாய் மற்றும் விதைப்பைக்கு இடையே உள்ள பகுதி) மீண்டும் மீண்டும் அதிர்ச்சி ஏற்படுவதாக அவர்கள் கருதுகின்றனர்.

ஜெர்மனியில் கொலோனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சைக்ளிங் ஆனது ஆண்மையிழப்பிற்கு காரணமாகிறது மற்றும் பிறப்புறப்பு உணர்வின்மைக்குக் கூட காரணமாகிவிடுவதாக தெரிவிக்கப்பட்டது. சைக்ளிஸ்டுகள் வாரத்திற்கு 400 கிமீக்கும் மேல் சைக்கிள் ஓட்டினால் பிறப்புறுப்பு உணர்வின்மை ஏற்படுவதாக 61% பேரும், விறைப்பு செயலின்மை ஏற்படுவதாக 19% பேரும் தெரிவித்தனர். நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டும் சைக்ளிஸ்டுகளுக்கு பெரினியல் தமனி சுருங்கிவிடுவன் காரணமாக பிறப்புறப்பு உணர்வின்மை மற்றும் பலவீனம் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.

இப்போது நாம் புரோஸ்டேட் சுகாதாரத்தில் சைக்ளிங்கின் விளைவு குறித்து பரிசீலனை செய்வோம்.

புரோஸ்டேட் சுகாதாரம் மற்றும் சைக்ளிங் (Prostate health and cycling)

புரோஸ்டேட் சுரப்பியானது ஆண்குறி வழியாக விந்தினை எடுத்து வந்து உடலில் இருந்து வெளியேற்றும் திரவத்தினை உற்பத்தி செய்கிறது. புரோஸ்டேட் ஆனது வயது ஏற ஏற வளர்ந்து, சிறுநீரையும் விந்தினையும் வெளியேற்றும் சிறுநீர்க்குழாயை அழுத்துவதால் சிறுநீர் பிரச்சினைகள் ஏற்பட வழிவகுத்துவிடும். இதனால் ஒருவருக்கு வீக்கம் ஏற்படும் ஆபத்து, விரிந்த புரோஸ்டேட் அல்லது புரோஸ்டேட் புற்றுநோயும் கூட ஏற்படக்கூடும்.

புரோஸ்டேட் குறிப்பிட்ட எதிரியாக்கி (புரோஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆண்டிஜென் – PSA), புரோஸ்டேட் வீக்கம் மற்றும் அதன் வளர்ச்சியை உணர்த்துவதாகும் (Prostate-specific antigen (PSA), the marker of prostate inflammation and growth):

புரோஸ்டேட் சுரப்பி புரோஸ்டேட் குறிப்பிட்ட எதிர்யாக்கியை (PSA) வெளியிடுகிறது. PSA வானது திடக்கரைசலாக இருக்கும் விந்தினை திரவமாக மாற்றுவதில் பங்கு வகிக்கிறது. PSA சீரம் சோதனை மற்றும் டிஜிட்டல் மலக்குடல் பரிசோதனை, புரோஸ்டேட் புற்றுநோயை பரிசோதிப்பதற்கு தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. PSA வானது தீங்கற்ற மற்றும் வீரியம் மிக்க புரோஸ்டேட் செல்களான புரோஸ்டேட்டிஸ் மூலமாக சுரக்கின்றன.

உடற்பயிற்சி மற்றும் சைக்ளிங்குடன் PSA வின் தொடர்பு (Relation of PSA to exercise and cycling):

சாதாரண PSA அடிப்படை அளவுடைய ஆண்களுக்கு பொதுவான உடற்பயிற்சிகள் (சைக்ளிங் அல்லாத) PSA வினை அதிகரிப்பதாக சான்றுகள் இல்லை. எனினும், சைக்ளிங் தொடர்புடைய ஆய்வுகளில் PSA அளவுகள் மாற்றமடைகின்றன, இருப்பினும் முடிவுகள் முரண்பட்டதாகவே இருக்கின்றன.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 129 சைக்கிளிஸ்டுகளிடம் செய்யபட்ட ஆய்வில், ஆரோக்கியமான வயதான ஆண்களில் ஒட்டுமொத்த புரோஸ்டேட் குறிப்பிட்ட எதிரியாக்கி (tPSA) அளவுகள் மாற்றமடைவதில் பங்கு வகிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சைக்ளிங் முடித்த பிறகு 4 நிமிடங்கள் கழித்து செய்யப்பட்ட ஆய்வில் tPSA வின் அளவுகள் சராசரியாக 9. 5% அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது.

2015 இல் கனடாவில் நடத்தப்பட்ட ஆய்வு சைக்ளிங் மற்றும் PSA வின் விளைவுகளை விரிவான ஆய்வு இலக்கியமாக செய்திருந்தது. அவர்கள் தொடர்ந்து சைக்ளிங்கில் ஈடுபடும் 912 பங்களிப்பாளர்களை உள்ளடக்கிய எட்டு ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். அந்த ஆய்வு PSA வின் மீது சைக்ளிங் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என கண்டறிந்திருந்தது.

தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் (Key Take-Away Messages)

புரோஸ்டேட் வளர்ச்சியின் மீது சைக்ளிங்கின் விளைவுகளுக்கான சான்றுகள் முடிவுறாததாக இருக்கின்றன (The evidence on effects of cycling on prostate growth is inconclusive).

செயல்முறைகள், வயது, மாதிரி அளவு, சைக்ளிங்கிற்கு பிறகு PSA சோதனை செய்யப்படும் நேரம் மற்றும் சைக்ளிங்கின் தீவிரம் முதலியவை பல்வேறு ஆய்வுகளில் மாறுபடுகிறது எனவே பயனுள்ள ஒப்பீடுகள் கடினமாக இருக்கின்றன. எனவே, சைக்ளிங்கிற்கும், PSA மற்றும் ஏதேனும் புரோஸ்டேட் தொடர்புடைய வளர்ச்சிக்கும் இடையே உள்ள உறவு தொடர்புடைய உறுதியான முடிவுகளை, ஆய்வு வடிவமைப்பின் நிலையற்ற தன்மை தடுக்கிறது.

சைக்ளிங் தொடர்பான பல ஆராய்ச்சி அறிக்கைகளை விரிவான மீளாய்வு செய்கையில் பெரும்பாலான ஆய்வுகள் சைக்ளிங்கிற்கு பிறகு, PSA அளவுகளில் எந்த மாற்றங்களையும் கண்டுபிடிக்காததையே சுட்டிக்காட்டுகிறது. புரோஸ்டேட் பிரச்சினைகள் மற்றும் சைக்ளிங்கிற்கு இடையே உள்ள இணைப்பை நிலைநாட்ட மேலும் முறையான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

பொதுச் சுகாதாரத்தில் சைக்ளிங் பல சாதசமான விளைவுகளைக் கொண்டிருக்கின்றது (Cycling has many favourable effects on general health):

தொடர்ந்து சைக்ளிங் செய்தல் உடற்பயிற்சியின் நல்ல வடிவம் ஆகும். மேலும் இதன் நன்மைகள் இதன் அபாயங்களைக் களைந்துவிடுகின்றன. தொடர்ந்து சைக்ளிங் செய்வதால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புற்றுநோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் முதலிய அபாயங்கள் குறைவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிறப்புறப்பு காயம் குறைவதற்கு முன்னெச்சரிக்கை (Precautions to minimise genital injury):

சைக்ளிங்கின் போது பிறப்புறப்பு தொடர்புடைய பகுதிகளில் அழுத்தத்தைக் குறைக்க முன்புறம் பெரிதாக இல்லாத சீட்டுகள் மற்றும் மற்ற அணுகுமுறைகளைப் பயன்படுத்துதல், பயண தூரங்களைக் கட்டுக்குள் வைத்திருத்தல் மற்றும் நீண்ட பயணங்களின் போது போதுமான இடைவெளி எடுத்துக் கொள்ளுதல் முதலியவை பயனுள்ளதாக இருக்கும்.

நீங்கள் புரோஸ்டேட் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் மற்றும் சைக்ளிங் தொடர்பான கவலை கொண்டிருந்தால் உங்களது மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.