இன்றைய இளைஞர்களை திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ள தூண்டுவதில் செல்போல் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரியவந்துள்ளது. மிசோராம் மாநிலத்தில் உள்ள கிருஸ்துவ அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்தது.
செல்போன் தூண்டுதல்
உலக அளவில் செல்போன் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பொருளாதாரம், வேலைவாய்ப்பு அதிகம் முள்ள வளர்ந்த மாநிலங்களாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் மட்டுமல்லாது, வடகிழக்கு இந்திய மாநிலங்களில் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த செல்போன் பயன்பாடுதான் இளம் தலைமுறையினரை திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ள தூண்டுகோலாக இருக்கிறது.
வடகிழக்கு மாநிலமான மிசோராமில் இளம் தலைமுறையினர் திருமணத்திற்கு முந்தைய உறவில் அதிக ஆர்வம் காட்டி வருவது அங்கு எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது.
இதேபோல் காமசூத்ரா காண்டம் நிறுவனம், மேற்கொண்ட ஆய்வில் நாடு முழுவதும் 17 ஆயிரத்து 45 பேர் பங்கேற்றனர். இதில் பாதிப்பேர், சென்னை, மும்பை, டில்லி, கொல்கட்டாவை சேர்ந்தவர்கள். காண்டம் பயன்படுத்துவோரில் சாப்ட்வேர் துறையில் உள்ளவர்கள் தான் அதிகபட்சமாக 17 சதவீதம்பேர் தைரியமாக தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். அடுத்து, மார்கெட்டிங், வர்த்தகத் துறைகளில் உள்ள நிர்வாகிகள், உயர் நிர்வாக பதவியில் உள்ளவர்கள் 13 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.
இரண்டு பேருக்கு மேல் அதிகம்
திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு கொண்டது உண்டா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, 49 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். இப்படி கூறியவர்கள் பெரும்பாலோர் 18 முதல் 24 வயது உள்ளவர்கள் தான். இதை விடக்கொடுமை என்னவென்றால், இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், ஒருவருக்கு மேல் செக்ஸ் உறவு கொண்டுள்ளனர் என்பதும் இந்த சர்வேயில் தெரிந்தது.
சினிமாக்களாலும், டி.வி தொடர்களாலும் தான், திருமணத்துக்கு முந்தை செக்ஸ் உறவு பற்றி தெரியவந்தது. அது தான் மக்களை கெடுக்கிறது என்று சொல்வதும் எந்தளவு உண்மை என்பதும் இந்த சர்வேயில் தெரிந்தது. 73 சதவீதம் பேர் நண்பர்கள், புத்தகம் படிப்பதன் மூலம், அடுத்து நீலப்படம் பார்ப்பது மூலம் தான் திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் வைத்துக்கொள்ள தூண்டுவதாக கூறியுள்ளனர்.
ஒரினச்சேர்க்கை
இதனையடுத்து ஓரினச்சேர்கையும் சமுதாயத்தில் கணிசமான அளவு அதிகரித்துள்ளது என்பதும் இந்த கணக்கெடுப்பில் தெரியவந்தது.
பல டீன் ஏஜ் வயதினர் வாய் வழிப்புணர்ச்சி கொள்வதில் மகிழ்ச்சி காண்கின்றனர் என்று சொல்கின்றனர். ஆனால் அது நல்லது தானா என்று கேட்டால், அது தானே பாதுகாப்பானது என்கின்றனர். இதுவும் வேதனையான விஷயம். இந்த விஷயத்தில் விழிப்புணர்வு, இளைஞர்களிடம் குறைவுதான் என்று தெரியவந்துள்ளது. வெறும் ஆறு சதவீதப் பேருக்குதான் வாய் வழிப்புணர்ச்சி மூலம் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு என்று தெரிகிறது. மேலும் எச்.ஐ.வி எய்ட்ஸ் பற்றிய பயமும் இளைஞர்களிடம் குறைந்து வருகிறது என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலோனோருக்கு காண்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. கருத்தடை சாதனம் பயன்படுத்த வேண்டும் என்பது சிலருக்குதான் தெரிந்துள்ளது.