Home சூடான செய்திகள் செக்ஸ்சில் ஆண்கள் எப்படி?

செக்ஸ்சில் ஆண்கள் எப்படி?

39

ஆண்களில் ராமன் கிடையாது என்று நம் ஊர் கவிஞர் ஒருவர் எழுதியிருந்தார். இது எல்லா நாட்டு ஆண்களுக்கும் பொருந்தும். உலகம் முழுவதும் 2.7 மில்லியன் ஆண்கள் தங்களின் மனைவியை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று அதிர்ச்சித்தகவலை தெரிவிக்கிறார் க்ரே நியூமென் என்ற எழுத்தாளர்.
மனித மனதில் எண்ணற்ற ஆசைகள் குடியேறி ஆட்டிப்படைக்கின்றன. பணம், பொருள் மட்டுமல்ல பாலியல் உணர்வுகளும் தூண்டிவிடப்பட்டு ஆண்களையும், பெண்களையும் ஆட்டிப்படைக்கிறது. இதனால் மரபு மீறிய செயல்களும், இலக்கணப்பிழைகளும் ஆங்காங்கே நேர்கிறது.
எது கிடைத்தாலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்தால் நல்லாருக்குமே என்ற மனதின் அடித்தள ஆசைதான் இதற்கெல்லாம் காரணம். இது செக்ஸுக்கும் பொருந்தும்.
என்னதான் தேவதை மாதிரி மனைவி இருந்தாலும், பிசாசு மாதிரி ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் வேண்டும் என்பது ஆண்களின் ஆசையாக இருக்கிறது. இது உண்மைதான் என்கிறார் இங்கிலாந்தின் பிரபல நாவலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளருமான வில்லியம் நிக்கல்சன். எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், ஆண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்களாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண்களைப் பொறுத்தவரை போதும் என்ற மனமே இல்லை. ஆண்களின் ஆசையும், செக்ஸ் ஆசையும் முற்றுப்புள்ளி இல்லாத தொடர் கதையாகவே உள்ளது. எவ்வளவு செக்ஸ் கிடைத்தாலும் அதை அனுபவிக்கவே அவர்கள் முயலுகிறார்கள். போதும் என்று நிறுத்திக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. வேடிக்கைக்காகவும், ஆசைக்காகவும்தான் இந்த கள்ள உறவுகளை அவர்கள் நாடுகிறார்கள்.