Home ஆண்கள் செக்ஸ் வாழ்க்கையைத் தீவிரமாகப் பாதிக்கும் ஆண்குறி முறிவு

செக்ஸ் வாழ்க்கையைத் தீவிரமாகப் பாதிக்கும் ஆண்குறி முறிவு

61

ஆண்குறி முறிவு என்றால் என்ன? (What is a penile fracture?)

ஆண்குறி முறிவு என்பது விறைத்த ஆண்குறி எதிர்பாராதவிதமாக வளைக்கப்படுவதால் ஏற்படும் ஒரு அசாதாரண நிலை ஆகும். ஆண்குறி முறிவு பொதுவாக கார்பஸ் கேவர்நோஸமில் ஏற்படும் அதிர்ச்சிகரமான முறிவு என குறிப்பிடப்படுகிறது. கார்பஸ் கேவர்நோஸம் அல்லது கார்பொரா (பன்மை) என்பது ஆண்குறியின் விறைப்புப் பகுதியை பருமனாக்கும் வாஸ்குலார் திசு ஆகும்.

காரணங்கள் (Causes)

அதிர்ச்சியின் காரணமாக ஏற்படும் ஆண்குறி காயம் பல காரணிகள் காரணமாக ஏற்படலாம்.  உடலுறவின் போது குறிப்பாக பெண் ஆதிக்கம் செலுத்தும் நிலைகளில், விளையாட்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஏற்படும் காயங்கள் போன்றவை பொதுவாக அறியப்படும் காரணங்களாகும்.

விறைத்த ஆண்குறி திடீரென, திடீர் அதிர்ச்சியில் அல்லது பக்க வாட்டில் வளைத்து விடுவதால் மெல்லிய உறுதியான டனிகா அல்பக்னியா (ஆண்குறி இணைப்புத் திசுவின் கடுமையான இழைம அடுக்கு) இயல்பாக உடைந்துவிடலாம். இதன் விளைவாக ஆண்குறி முறிவு ஏற்படும். ஆண்குறியில் இந்த முறிவு மற்றும் சிறுநீர்க் குழாயில் காயம் ஏற்படுவதில் ஒன்று அல்லது இரண்டு கார்பொராவும் தொடர்புடையதாக இருக்கலாம்.

அறிகுறிகள் (Symptoms)

இவ்வாறு திடீரென காயமடைந்த ஆண்குறியில் விறைத்த நிலையில் ஆண்குறி இருக்கும் போது “உறுத்தலுடனும்” வளைந்தும் இருத்தல், திடீரென விறைப்புத் தன்மை இழந்து விடுதல் முதலியவை ஆண்குறி முறிவுக்கான அறிகுறிகளாகும். ஏற்படும் காயத்தைப் பொறுத்து வலி குறைவாகவோ அதிகமாகவோ இருக்கலாம். ஆண்குறியானது வழக்கத்திற்கு மாறாக வளைந்திருந்தாலோ, வீங்கி இருந்தாலோ, தொடும்போது கூச்சமாக இருந்தாலோ இப்பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். ஒரு நபருக்கு சிறுநீர்க்குழாயில் இப்பாதிப்பு ஏற்பட்டிருப்பதை சிறு நீரில் இரத்தம் கலந்திருத்தல் அல்லது சிறு நீர் கழிக்க சிரமப்படுதல் போன்ற அறிகுறிகளால் கண்டறியலாம்.

நோய் கண்டறிதல் (Diagnosis)

ஆண்குறி முறிவுகளைப் பொதுவாக முந்தைய மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனை ஆய்வுகளை அடிப்படையாக வைத்து மட்டுமே கண்டறிய முடியும். ஆயினும் கூட, உறுதி படுத்த முடியாத சந்தர்ப்பங்களில், காந்த ஒத்ததிர்வு படமெடுத்தல் (எம்ஆர்ஐ) அல்லது கேவர்நோசோ கிராஃபி (ஆண்குறி கார்பஸ் கேவர்நோஸமை கதிரியக்கக் காட்சிப்படுத்தல்) பரிசோதனை தேவைப்படலாம்.

இந்த பாதிப்பால் சிறுநீர்க் குழாயில் காயங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, அறுவை சிகிச்சைக்கு முந்தைய பிற்போக்கு யூரெத்ரோகிராபிக் (சிறுநீர்க்குழாயில் செய்யப்படும் கதிர்வரைவியல் ஆய்வு) ஆய்வுகள் செய்து கண்டறிய வேண்டும்.

சிகிச்சை (Treatment)

ஆண்குறி முறிவின் சிக்கல்கள் மிகவும் உயர் விகிதங்களில் இருப்பதால் அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை முறைகள் அல்லது பாரம்பரிய சிகிச்சை முறைகள் ஏதும் செய்யப்படுவதில்லை. தற்போது அவசர அறுவை சிகிச்சையும் சரிசெய்தலும் பரிந்துரைக்கப்படுகிறது.

வலி மிகுந்த அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளித்தல், விறைப்புச் செயலின்மையைத் தடுத்தல், சாதாரணமாக சிறு நீர் கழித்தல் மற்றும் பரிசோதனையில் ஏற்படும் தாமதத்தினால் ஏற்படும் சிக்கல்களைக் குறைத்தல் முதலியவையே அறுவை சிகிச்சை சரிசெய்தலில் முக்கிய நோக்கமாகும்.

தடுப்பு (Prevention)

பெண் ஆதிக்கம் செலுத்தும் உடலுறவைத் தவிர்த்தல், தீவிரமான உடலுறவைத் தவிர்த்தல், ஆக்ரோசமான சுய இன்பத்தைத் தவிர்த்தல், ஆண்குறியில் காயம் ஏற்படும் விதமான அபாயகரமான நிலைகளை உடலுறவில் தவிர்த்தல் முதலியவை ஆண்குறி முறிவு ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.

சிக்கல்கள் (Complications)

இந்த பாதிப்பால் ஏற்பட வாய்ப்புள்ள சிக்கல்கள் பின்வருமாறு:

விறைப்புச் செயலிழப்பு
அசாதாரண ஆண்குறி வளைவு
விறைப்பு நிலையில் வலி
நாரிழைய பிளெக்ஸ் உருவாக்கம்
ஆண்குறியில் கட்டி
கார்பொரோரேத்ரல் ஃபிஸ்துலா
காயம் ஏற்பட்ட இடத்தில் வலி மிகுந்த முடிச்சுகள்
அபாய நிலைகள் (Red Flags)

ஆண்குறி முறிவு ஏற்பட்டிருப்பதற்கான எந்த அறிகுறி தோன்றினாலும் உடனடியாக கவனித்து அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.