Home பாலியல் செக்ஸ் வாழ்க்கையில் தடுமாறாமல் இருக்க வழிகள்

செக்ஸ் வாழ்க்கையில் தடுமாறாமல் இருக்க வழிகள்

23

imagesதெளிவான நீரோட்டம் போல சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக்கை. அவ்வப்போது எழும் புகைச்சல்களை ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசினால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

அன்றாட வாழ்வில் வரும் குடும்ப பிரச்சனைகளில் கணவன் மனைவியரிடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படுவது இயற்கை. இது மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்றவை ஏற்படும். இத்தகைய ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி.

எனவே அவற்றை நீடிக்க விடாமல் பரஸ்பரம் பேசித் தீர்க்க வேண்டும். ஏனெனில் மனஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டும் இணைவது நல்லதல்ல என்கின்றனர் உளவியலாளர்கள். தினமும் நடக்கும் பிரச்சனைகளுக்கு அன்றே தீர்வு கண்டு விடுங்கள். அதற்கு மேல் வளர வீடாதீர்கள்.

உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உடலுறவு செய்வது கூடாது. இதனால் மூட்டு உபாதைகளும், வேறு பல உடல்நலக்கோளாறுகளும் ஏற்படும். எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந்துகளை உண்ணக்கூடாது.

தாம்பத்ய வாழ்க்கையின் தொடர் வெற்றிக்கு கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த – புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

உயிர்ச்சத்துக்களை அதிகம் தரும் சத்தான காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும். தாம்பத்ய உறவிற்கு ஏற்க உணவுப்பொருட்களை அவ்வப்போது சேர்த்துக்கொள்ள வேண்டும். தம்பதியரிடையே தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் இருப்பதில்லை.ஆணுக்கு ஆவல் அடிக்கடி ஏற்படும்.

பெண்ணுக்கு விருப்பமில்லாதபோது தொல்லை தரக்கூடாது என்றெண்ணி அடக்கிக்கொள்கிறான். இது தொடர்கதையானால் மனைவி மீது ஒருவித வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே பெண்கள் ஆண்களின் மனநிலையறிந்து இயன்றளவு தங்களை சரிசெய்துகொள்ளுவது இல்லறத்தை இனிக்கச் செய்யும்.

ஆண்கள் அவர்களது விருப்பம் அறிந்து உதாசீனப்படுத்தாமல் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும். பரஸ்பர மனவிருப்பம், தேவை அறிந்து உடல் எழுச்சியை வரவழைத்து தாம்பத்தியம் மேற்கொள்வது தம்பதியரிடம் என்றென்றும் இறுக்கமான பிணைப்பையும், இணைப்பையும் உறுதிப்படுத்தும். எதற்குமே ஒரு எல்லை உண்டு.

அது தாம்பத்திற்கு மிகவும் அவசியம். அடிக்கடி வரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும். தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையறையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம்.

உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல என்கின்றனர் உளவியலாளர்கள். தாம்பத்தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் இனிமை தராது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.