Home பாலியல் செக்ஸ் பிரச்சினைகளும்! சில செக்ஸ் ஆய்வுகளும்! – ஓர் உளவியல் பார்வை!

செக்ஸ் பிரச்சினைகளும்! சில செக்ஸ் ஆய்வுகளும்! – ஓர் உளவியல் பார்வை!

30

images (3)நாம எல்லாரும் தெரிஞ்சி க்க, புரிஞ்சிக்க, விவாதிக் க விரும்புற ஆனா இப்படி யெல்லாம்செய்ய ஏனோ தயங்குற ஒரு விஷயமா த்தான் இருக்கு “செக்ஸ்” சம்பந்தப்பட்ட எல்லாவித மான கருத்துகளுமே நம்ம சமுதாய த்துல இதுவரைக்கும்! அளவான எல்லா விஷயங்களுமே

நல்ல துதான்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்! அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் செக்ஸ்கூட!
ஆனா செக்ஸை சுத்தி நாம மூட நம்பிக்கைகள், தயக்கங்கள், பயங்கள், தவறான புரிதல்கள் இப்ப டி எத்தனையோ சுவர்கள எழு ப்பி, செக்ஸை பத்தின அடிப்படை உண்மைகள், யதார்த்தங்கள் இப்படி எது வுமே வெளியில் தெரியா மலும், விளங்காமலும் போவதற்க்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கிட்டோம்! விளை வு, செக்ஸை எப்படி அணுகுவதென்று தெரியாமல், செக்ஸ் குற்ற ங்கள், கற்பழிப்புகள், கள்ள உறவுகள் இப்படி பலவகையா ன சிக்கல்களையும், குழப்பங் களையும் தொடர்ந்து சேர்த்து க்கிட்டே வர்றோம். இதெல்லா ம் என்னைக்கு பூதாகரமா வெ டிக்கப்போவு தோ தெரியல?!

செக்ஸ் சம்பந்தப்பட்ட எத்த னையோ குழப்பங்கள்ல ஒன்னுதான் இந்த உச்சக்கட்டம்! உச்ச க்கட்டம் அப்படீன்னா என்னன்னு கேட் டா, ஒரு பதில் இல்ல, கிட் டத்தட்ட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான பதி லைத் தான் சொல்வாங்க! ஏன்னா, உச்சக்கட்டம் என்ப து விவரிக்கமுடியாத, அனு பவித்துமட்டுமே உணரக்கூ டிய ஒரு சிக்கலான உணர்வு! ஆனா, விஞ்ஞானமும், உள வியலும் உச்சக்கட்டத்துக்கு வெவ்வேறு விளக்கங்களைக் கொடுக்கின் றன என்பது குறிப்பி டத்தக்கது! அந்த விளக்கங்கள நாம இன் னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம். இப்போ இன் றைய பதிவுச் செ ய்தியை பார்ப்போம் வாங்க….
உச்சக்கட்டம் அப்படீங்கிற து அடிப்படையில, பால் உ றுப்புகளின் தூண்டுதலில் தொடங்கி, உடலளவிலா ன பலவகையான மாற்ற ங்களையும், மனதளவி லான சில மாற்றங்களையும் உள்ளடக் கிய ஒரு எழுச்சி நிலை. இந்த எழுச்சி நிலைக்கு உடலின் பல் வேறு பாலுறுப்புகளிலிரு ந்து மூளைக்கு செல்லும் ரசாயன சமிக்ஞைகளும், அதற்க்கான மூளையின் எதிர்வினை யாய் உடலின் பல்வேறு ப குதிகளில் ஏற்படும் உடலிய க்க மாற்றங்களுமே காரண ம்!
ஆர்கஸம்/அனார்கஸ்மியா பிரச்சினைகளும் சில பாலி யல் ஆய்வு களும்!

இந்த உச்சக்கட்டத்தை ஆங் கிலத்தில் ஆர்கஸம் என்கிறார்கள். உலகில் செக்ஸில் ஈடுபடும் எல்லாருக்குமே, உடலுறவின்போது உச்சக்கட்டத்தை அடைவது தான் குறிக்கோள். ஆனாலு ம், உச்சக் கட்டத்தை அடைவ து என்பது பலருக்கு கைவ ராத ஒரு கலையா கத்தான் இருக்கிறது என்கிறது விஞ் ஞானம்! உச்சக்கட்டத்தை அடைந்தால் சந்தோஷம் இல் லைன்னா என்ன உசுரா போ ய்விடு ம் அப்படீன்னு நீங்க யோசிக்கலாம். செக் ஸில் ஈடுபடுவோரால் தொடர்ந்து உச்சக்கட்டத்தை அடையமுடியவில்லையென்றால் அது அனார் கஸ்மியா (anorgasmia) எனும் செக்ஸ் குறைபாட்டில் தான் முடி யும் என்கிறார்கள் பாலியல் துறை ஆய்வாளர்கள்!

இந்தப் பிரச்சினை அதுபாட்டு க்கு இருந்துட்டுப்போய்டா ஒன்னும் பிரச்சினையில்ல. ஆனா, ஒருத்தரோட வாழ் க்கைத்தரத்தையும், உறவுக ளையும் பாதிக்கக்கூடியது இந்தக் குறைபாடு என்கிறார் அமெரிக்காவின், லாஸ் ஏஞ் ஜலீஸிலுள்ள செடார் சினாய் மருத்துவ மையத்தின் உளவியல் ஆய்வாளர் வாகி வில்லியம் இஷக்!
உச்சக்கட்டத்தை எட்டமுடியா மை என்பது பெண்களிடையே ஒரு பொதுவான பிரச்சினையா க இருக்கிறது என்கிறார் இஷ க். கடந் த 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 20 முதல் 40 வய தான பெண்களி ல், சுமார் 24% பெண்களுக்கு மாதக்கணக்கில் உச்சக்கட் டத்தை எட்டமுடியாமை இருப்பது கண்டறியப்பட்டது என்றும், அனார்கஸ்மியா குறைபாட் டினால் அவதிப்படும் இவர்க ளில் ஒரு சிலரே மருத்துவ நாடுகிறார்கள் என்றும் கூறுகிறா ர் விஞ்ஞானி இஷ க்! காரணம், சமுதாயத்தில் செக்ஸ் செயல் பாடில் திறமையின்மை என்பது ஒரு அவமானமாக கருதப்படு கிறது என்பதே என்கிறார்!
உளவியல் விஞ்ஞானி திரு.இஷக் அவர்களின் தலைமையிலான சமீபத்திய ஒரு ஆய்வில், நான்கில் ஒரு பெண்ணு க்கு ஒரு பகல் கனவா கவே இருக்கும் உடலுற வின்போது உச்சக்கட்டம் என்னும் குறைபாட்டை தீர்க்க மருத்துவமும், இ துவரையிலான ஆய்வுக ளும் போதவில்லை என் று தெரியவந்துள்ளது! பெண்களின் உச் சக்கட்டக் குறைபாடு குறித்து இதுவரை நடத்த ப்பட்ட சுமார் 101 ஆய்வுகளை அலசிய இந்த ஆய்வில், பெண் களின் செக்ஸ் பிரச்சனை களிலேயே இரண்டாவது தலையாய பிரச்சினையா ன உச்சக்கட்டத்தை எட்ட முடியாமை என்பதற்க் கான சிகிச்சைகள் மிக மிகக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது என் கிறார்கள் இஷக் தலை மையிலான ஆய்வு க்குழுவினர்!
பலவகையான செக்ஸ் தெரபிகளை மேற்கொள்ளக்கூடிய திற மைசாலியான் பல பாலியல் மருத்துவர்கள் இருக்கிறார் கள் என்றபோதும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் ம ருந்துகள் என்று பார்க்கையி ல், ஒரு மருந்து சரியா, தவ றா என்றறியும் சோத னை முயற்ச்சிகளே என்கிறார் இஷக்!

ஆர்கஸம் குறித்த குழப்பங் களும், அனார்கஸ்மியாவுக்கான தீர்வு களும்!
உச்சக்கட்டம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒருவர் மருத் துவரை அணுகினாலும், தீர் வுக்கான சிகிச்சை சிக்கலா னது. காரணம், உச்சக்கட்டத் தைப் பொருத்தவரை இத்த னை நாட்களில், இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அடை வதுதான் இயல்பானது என்று சொல்லும் ஒரு திட்டவட்ட மான வரையரை கிடையாது! ஆக, மருத்துவர்கள் நோயாளிகளி ன் வயது, செக்ஸ் அனுபவம் மற்றும் திருப்தி ஆகியவற்றைக் கொ ண்டே ஒரு தீர்வை காண முயலவேண்டும் என்கிறார் இஷக்!
ஆர்கஸம் தொடர்பான குழப் பம் ஒரு பக்கமென்றால், அ னார்கஸ ம் ஏன் ஏற்படுகிறது என்பதற்க்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிவது என்பது இன்னொரு பெரிய பிரச்சினை! அனார்கஸ ம் குறைபாடுள்ளவர்களில் பலருக்கு குறைபாட்டுக்கு காரணம் உளவியல்பூர்வமானது. உதா ரணமாக, கடந்தகால பாலிய ல் துன் புறுத்தல்கள், செக்ஸ் தொடர்பான குற்ற உணர்வு மற்றும் தோற் றம் குறித்த குற்ற உணர்வு! முறிந்துபோ ன திருமண உறவுகள் மற்று ம் செக்ஸ் குறித்த விவா தமின்மை ஆகியவை வேறு சில கார ணங்கள்! உறவுகள் குறித்த கௌன்சிலிங் மற் றும் சைக்கோ தெரபி ஆகியவை இவர்களுக்கான சிறந்த சிகி ச்சைகள்!

வேறு சில பெண்களுக்கு, அ னார்கஸ்மியாவுக்கான காரண ங்க ள் மருத்துவ ரீதியானது! உதாரணமாக, சிறுநீரகக் கோ ளாறுகள், ஃபைப்ரோமயால்ஜி யா மற்றும் அத்தீரோஸ்க்ளீ ரோசிஸ் என்னும் கொலஸ்டி ரால் மூலம் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு ஆகி யவை என்கிறது ஒரு ஆய்வு! குழ ந்தைப்பிறப்புக்குப் பின்னான விலா எலும்புகளின் உறுதியின் மையும் மற்றுமோர் காரண மாம். இம்மாதிரியானவர்களு க்கு, ஹார்மோன் மாத்திரை களான டெ ஸ்டோஸ்டீரோன் மற்றும் ஈஸ்ட்ரஜன் பலன் தரக்கூடுமென்றாலு ம், டெஸ் டோஸ்டீரோனால் ஆண்தன் மை அதிகரிக்கும் ஆபத்து ம், ஈஸ்ட்ரஜனால் கேன்சர் வரும் ஆபத் தும் இருக்கிறது என்பது கவனத்தில் கொள்ளவேண்டியவை!!
அனார்கஸ்மியாவுக்கு தீர்வு காண வேண்டும் பல ஆய்வு கள்!

பெண்களின் உச்சக்கட்டம் தொடர்பான குறைபாடுக ளைக் குணப் படுத்துவதற்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பான எஃப் .டி.ஏ வின் தரச்சான்றிதழ் மற்றும் ஒப்புதல்பெற்ற மரு ந்துகள் இதுவரை இல்லை!!
இப்பிரச்சினைக்கான தீர்வு என்று கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஃப்லி பான்செரின் (flibanserin) என் னும் மருந்து தரமானதில்லை என்று எஃப்.டி.ஏ வால் நிராகரிக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது!
இஷக் அவர்களின் சமீபத்திய ஆய் வில், ஹார்மோன் தெரபிகள், வ யாக்ரா போன்ற மருந்துகள் உச் சக்கட்டம் தொடர்பான குறை பாடுகளுக்கு பலனளிக்கக்கூடிய வை என்று முந்தைய சில ஆய் வுகள் சொல்லியிருந்தாலும், அந்த ஆய்வுகள் முழுமையானதாக இல்லை என்று கண்டறியப்பட்டது! கடந்த 2003 ஆம் ஆண்டு, தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட செஸ்ட்ரா (Zestra) என்னும் எண்ணை பெண்களுக்கு உச்சக்கட்டத்தை ஏற்படுத்தி யது என்று ஒரு ஆய்வு சொ ன்னாலும், ஆய்வில் கலந் துகொண்டவர்களின் எண் ணிக்கை வெறும் 20 பெண்க ள் என்றும், அதில் 10 பேரு க்கு இந்த எண்ணையும், ம ற்றவர்களுக்கு ப்ளாசிபோ என்னும் மருந்தில்லா பொரு ளுமே கொடுத்து சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது!மிகச்சிறிய இந்த ஆய்வு ஏற்றுக் கொள்ளக்கூடி யதாய் இல்லை என்கிறார் இஷக்!

ஆக, உச்சக்கட்டம் தொடர் பான குறைபாடுகளான அ னார்கஸ்மி யா போன்றவ ற்றிற்க்கு தீர்வு காண, பு திய மருந்துகளை சோதிக் கும்போது, பெரிய எண்ணி க்கையில் பெண்களை சோதனைக்கு உட்படுத்தும், பெரிய அளவிலான ஆய்வுகள் மிகவு ம் அவசியம் என்றும், தரமான வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு மனிதச் சமு தாயத்தை உருவாக் க, செக்ஸ் குறைபாடுகளை தீர்க் க வேண்டி யது மிக மிக அவசியம் என்கிறார் ஆய்வாளர் இஷக்!!
விஞ்ஞானி இஷக் சொல்வது வாஸ்தவம் தானே? நீங்க என்ன நினைக்கிறீங்க?