Home சூடான செய்திகள் செக்ஸ் குறித்த எண்ணம் இருந்தால்தான் ‘அச் அச்’ (தும்மல்)?

செக்ஸ் குறித்த எண்ணம் இருந்தால்தான் ‘அச் அச்’ (தும்மல்)?

31

அச் அச்’ என்று தும்முகிறீர்களா.. அப்படியானால் நீங்கள் செக்ஸ் குறித்த சிந்தனையில் இருக்கிறீர்கள் என்கிறது ஒரு ஆய்வு.

தும்மல் வந்தால் உடனே சளி பிடித்து விட்டதோ என்று எண்ணக் கூடாதாம். மாறாக, செக்ஸ் குறித்த எண்ணம் இருந்தால்தான், அந்தக் கோணத்தில் சிந்தித்துக் கொண்டி ருந்தால்தான் தும்மல் வரும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இதுகுறித்து ஆக்ஸ்போர்டில் உள்ல ஜான் ரேட்கிளைப் மருத்துவ மனையில் காது மூக்குத் தொண்டை நிபுணராக இருக்கும் டாக்டர் மஹமூத் பட்டா கூறுகையில், என்னிடம் ஒரு நோயாளி வந்தார். கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு அடிக்கடி தும்மல் வருவதாக கூறினார். அதுகுறித்து அவரிடம் விரி வாகப் பேசியபோது, செக்ஸ் குறித்த சிந்த னை எப்போதெல்லாம் அவருக்கு வந்ததோ அப்போதெல்லாம் கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு தும்மலும் வந்திருப்பதை நான் உணர்ந்தேன்.
நான் இதை அவரிடம் சொன்னபோது அவ ரால் நம்ப முடியவில்லை. இதை யடுத்து இதுதொடர்பான ஆராய்ச்சியை விரிவு படுத்த எணணி இன்டர்நெட் மூலம் தக வல்கள் சேகரித்தேன்.
தும்மல், செக்ஸ் குறித்து அதிகம் உரை யாடியவர்கள் குறித்த கூகுள் சர்ச்சில் தேடிப் பார்த்தபோது ஏராளமான தகவல்கள் எனக்குக் கிடைத் தன.
நான் சேகரித்த தகவல்களின்படி இரு பாலினங்களையும் சேர்ந்த 17 பேருக்கு செக்ஸ் குறித்த சிந்தனை வந்தபோதெல் லாம் தும்மலும் வந்ததாக தெரி வித்தனர். அதேபோல ஆர்கஸம் ஏற்பட்ட பிறகு தும்மல் வந்ததாக 3 பேர் தெரிவித் திருந்தனர்.
இப்படி செக்ஸ் சிந்தனை வரும் போது தும்மல் வருவ தற்கு நமது நரம்பு மண்ட லத்தில் உள்ள தானியங்கி நரம்பு கட்டமைப்பே காரணம்.
இந்த நரம்புப் பிரதேசம் நமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. இந்த நரம்புக் கட்டமைப்புதான் பல்வேறு செயல்களை கட்டுப்ப டுத்துகிறது. அதாவது இதயத் துடிப்பு, நமது கண் விழித் திரை யில், நுழையும் ஒளியின் எண்ணிக்கை உள்ளிட்ட முக்கியமான சில செயல்களை இது கட்டுப்படுத்துகிறது.
சில சமயம் இதன் வேலையில், பிற சமிக்ஞைகள் குறுக்கி டுவதும் உண்டு. அப்படி நேரும்போதுதான் இந்த தும்மல் போன் றவை ஏற்ப டுகிறது. அதாவது செக்ஸ் உணர்வு தூண்டப் படும்போது சமிக்ஞைகள் குறுக்கிட்டு தும்மலை ஏற்படுத்துகிறது என்கிறார் பட்டா.
‘நச்’சுன்னு எதையாவது நினைத்துப் பாருங்கள், ‘அச்’சுன்னு தும்மல் வருதான்னு பார்க்கலாம்…!