Home சமையல் குறிப்புகள் சுவையான வெங்காய சட்னி

சுவையான வெங்காய சட்னி

28

11863250_1048066008546224_6880588951073403330_nதேவையான பொருட்கள் :
வெங்காயம் – 4
தக்காளி – 2
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
உப்பு
புளி
எண்ணெய்
தாளிக்க :
கடுகு
உளுத்தம் பருப்பு
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
செய்முறை :
• வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கணும்.
• வெங்காயம் லைட்டாக கலர் மாறும் போதே இறக்கி, ஆறவைத்து கூட புளி, உப்பு போட்டு அரைத்து கொள்ளவும்.
• மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அரைத்த கலவையில் ஊற்றி நன்றாக கலக்கவும்.
• இப்போது சுவையான வெங்காய சட்டி ரெடி.
• இட்லிக்கு தொட்டு கொள்ளும் போது அந்த சட்னியில் மேல் சிறிது நல்லெண்ணெய் விட்டு கலந்து தொட்டு கொண்டு சாப்பிட்டா…….. சூப்பரா இருக்கும்.