Home சமையல் குறிப்புகள் சுவையான பன்னீர் ரோஸ்ட்

சுவையான பன்னீர் ரோஸ்ட்

19

fb2f0922-e2d0-4d56-82d9-b3195f323e46_S_secvpfதேவையான பொருட்கள் :

பன்னீர் – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – சின்னதாக 1
பச்சை மிளகாய் – சின்னதாக ஒன்று
கொத்தமல்லி இலை – அரை கப்
எண்ணெய் – சிறிதளவு
ருசிக்கு – உப்பு

செய்முறை

• பன்னீரைச் சற்று பெரிய துண்டங்களாக நறுக்கவும்.

• வெங்காயம், மிளகாய், தக்காளி, கொத்தமல்லி உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.

• அடுத்து நான் ஸ்டிக் பேனில், மிதமான தீயில் பரவலாக சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி பன்னீர் துண்டுகளை பரப்பவும்.

• ஒரு புறம் சிவந்ததும் நிதானமாக மறுபுறம் திருப்பிப் போட்டு சற்று சிவக்க வைத்து எடுத்து டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெயை நீக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகளை போட்டு அதன் மேல் வேண்டிய அளவிற்கு அரைத்த பேஸ்ட்டைப் பிசறி தட்டுகளில் அலங்கரித்து வைக்கவும்.

• பேஸ்ட் மிகுதியானால் தயிரில் கலந்தால் பச்சடியாகிவிடும்.

• பன்னீர் பிடித்தவர்களுக்கு இந்த பன்னீர் ரோஸ்ட் ருசியான ஒன்று.