படிக்கும் பொது செக்ஸ் ஞாபகமாவே இருக்குதா? சுய இன்பம் பண்ணனும்னு அடிக்கடி தோணுதா?
சுய இன்பம் என்பது மனதிற்கு ஒரு சாதாரண சமாதான நடவடிக்கையே தான் . அதனால் இப்பழக்கத்தில் ஈடுபடுவது தவறல்ல. ஆனால் அதைவிட காம உணர்வை கட்டுப்படுத்த பெண்களும் ஆண்களும் தெரிந்து கொள்வது நல்லது.
ஐடியா ஒன்று:
இளம் வயதில் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதால் அதற்கு சதா தீனி தேவைப்படுகிறது. நீங்கள் சரியான தீனி போடாவிட்டால் மனம் தன் விருப்பத்திற்கு ஏதாவது முருங்கை மரத்தில் ஏறி ஆடு ஆரம்பித்து விடும். அதனால் கதை, கவிதை, அறிவியல் ஆராய்ச்சி என்று அறிவுக்கு உணவு போட்டுக் கொண்டே இருந்தால் மனதில் வெறுமை தோன்றாது.
ஐடியா இரண்டு:
தனிமையை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். செய்வதற்கு எதுவுமே இல்லாத போது, தனியாக இருப்பது கண்டதையும் பரீட்சித்து பார்க்க தூண்டி விடும். எனவே எப்போதும் பலர்சூழ இருக்க முயற்சி செய்யுங்கள்.
ஐடியா மூன்று;
விளையாட்டில் ஈடுபடுங்கள்-&அது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஹார்மோன்களைச் செலவழிக்க ஒரு நல்ல வடிகாலாகவும் அமைகிறது.
ஐடியா நான்கு:
ஏதாவது சுவவாரசியமான பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த பொழுது போக்கில் ஈடுபடும் போது பிற தேவையில்லாத எண்ணங்களை மறந்து சுவாரஸ்யத்தில் மனம் லயிக்குமாறு செய்யுங்கள்.
ஐடியா ஐந்து:
பெற்றோருக்கு உதவி செய்யும் வகையில் வீட்டு வேலைகளில் உடலை வருத்தி உழைத்தால் கூட சில தேவையில்லாத காம எண்ணங்கள் வருவதை அறவே தவிரிக்க இயலும்.
ஐடியா ஆறு:
காம உணர்வு தலைதூக்கினால் சுய இன்பமா, வெறும் கற்பனையா, சைட் அடிப்பதா ஏதாவது ஒரு சமாதான நடவடிக்கை தானாக தலைதூக்கும். கொஞ்ச நேரத்தில் மனம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். உடனே அடுத்தடுத்த வேலையை பாக்க நகருங்கள். இன்னும் கொஞ்ச நேரம் என்று இதிலேயே மூழ்கி வேதாளத்தை உயர உயர முருங்கை மரத்தில் ஏற்றி விடாதீர்கள்.