சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது கழித்தப் பின்போ, ஒருவித எரிச்சல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், அதற்கு உடனே சிறுநீர் பாதையில் தொற்றுநோய் என்று அர்த்தம் இல்லை. அதிலும் இந்த மாதிரியான பிரச்சனையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே அவஸ்தைப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் அடிக்கடி கழிவறைக்கு செல்ல முடியவில்லை என்று வெளியேறும் கழிவுகளை அடக்கி வைக்கின்றனர். இதனை சரிசெய்தால் மட்டும், எரிச்சல் ஏற்படுவதை தடுக்க முடியாது. இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று தெரிந்து கொள்வதோடு, அதற்கான வீட்டு மருத்துகளையும் தெரிந்து கொண்டு, பின்பற்றி வந்தால், சிறுநீர் கழித்தப் பின் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம். எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள்: * சிறுநீர் பாதை தொற்றுநோய் * உடலில் நீர் வறட்சி * சிறுநீரக கற்கள் * கல்லீரல் பிரச்சனை * அல்சர் * பிரசவத்திற்கு முன்னோ அல்லது பின்போ நரம்புகளில் பாதிப்பு இருப்பது * விந்து அல்லது விரைகளில் உள்ள தொற்றுநோய் * பால்வினை நோய் * பெரிதான புரோஸ்டேட் * நீரிழிவு * ஊட்டச்சத்துக் குறைவு * குறுகிய சிறுநீர் பாதை எரிச்சலைத் தடுக்கும் சிறப்பான வீட்டு மருந்துகள்: * அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும இருக்கும். ஆகவே ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும். இருப்பினும் எரிச்சலுடன் இருந்தால், அது சிறுநீர் பாதையில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். * குருதிநெல்லிக் கனியின் (cranberry) ஜூஸை சாப்பிட வேண்டும். பெரும்பாலான சிறுநீர் பாதை தொற்றுநோய்கள் மற்றும் குறுகிய சிறுநீர் பாதையினால் ஏற்படும் எரிச்சலை, இந்த சிட்ரஸ் பழத்தின் ஜூஸானது சரிசெய்யும். வேண்டுமெனில் எலுமிச்சை ஜூஸ் கூட குடிக்கலாம். ஏனெனில் சிட்ரஸ் பழ ஜூஸ்கள், பாக்டீரியாவை அழிக்கவல்லது. * நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம். சொல்லப்போனால், நெல்லிக்காய் பெரும்பாலான ஆயுர்வேத மருந்துவத்தில் நோயை குணமாக்கப் பயன்படுகிறது. * தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இவற்றை மயக்க நிலை மற்றும் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து வந்தால், அந்த எரிச்சலானது போய்விடும். வேண்டுமென்றால் அத்துடன் வெல்லம் மற்றும் மல்லி தூளை சேர்த்து குடிக்கலாம். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும். * ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால், சரியாகிவிடும். * எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆகவே தினமும் இரண்டு அல்லது மூன்று முறை, கருப்பை வாய்க்குழாய் (vagina) மற்றும் ஆண்குறியை (penis) கழுவ வேண்டும். இதனால் பாக்டீரியாவானது தங்காமல் தடுக்கலாம். * சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும் எரிச்சலுடன் கூடிய சிறுநீர் வெளியேறும். ஆகவே பீர் குடித்தால், அந்த கற்கள் கரைந்துவிடும். அதையே காலையில் குடித்தால், உடலில் வறட்சி ஏற்படும். ஆகவே அப்போது அத்துடன் தேங்காய் நீர் மற்றும் அதிக தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும். மேற்கூறியவாறெல்லாம் செய்தால், எரிச்சலுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம் சரியாகிவிடும். வேறு என்னவெல்லாம் செய்தால், சரியாகும் என்பது உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.