Home குழந்தை நலம் சிசு பற்றிய அபூர்வமான சில விஷயங்கள்!!

சிசு பற்றிய அபூர்வமான சில விஷயங்கள்!!

29

01உடலுறவு என்பதை தாண்டி, கருத்தரிப்பது என்பது அழகான விஷயம். பெண்களுக்கு 100% பெண்மையை தருவது தாய் எனும் ஸ்தானம் தான். பத்து மாதம் என்பது தனி யுகம் போன்றவது பெண்களுக்கு. அதுவும் முதல் குழந்தை என்றால் சொர்கத்தையும் தாண்டிய ஓர் அற்புத நிலை.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்

தாய் என்பவள் தனது குழந்தை அழுவதை கண்டு சிரிக்கும் முதலும் கடைசியுமான தருணம் தான் பிரசவம். அதற்கு ஒரு நொடி முன்பு வரை கருவறையில் இருக்கும் சிசுவை பற்றிய விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா? தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதத்தில் ஏற்படும் இரத்த கசிவிற்கான காரணங்கள்..

கண்ணும், காதும்
கருத்தரித்த எட்டாவது வாரத்தில் சிசுவின் கண்ணும், காதும் உருவாகிறது. அப்போது சிசு வெறும் இரண்டு செ.மீ உயரம் நீளம் தான் இருக்கும்.

பிறப்புறுப்பு
கருத்தரித்த 9வது வாரத்தில் பிறப்புறுப்பு வளர தொடங்கிவிடும். ஆயினும் ஆணா, பெண்ணா என்பது 12வது வாரத்தில் தான் தெரியவரும். இது மிகவும் வியக்கத்தக்கது ஆகும்.

உடல் உருவம்
சரியாக 12வது வாரத்தில் கை, கால்கள் விரல்கள் உட்பட முழு உடல் உருவமும் உருவாகும். அப்போது குழந்தை 5 செ.மீ நீளம் தான் வளர்ந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அசைவு
சரியாக 20வது வாரத்தில் சிசு தாயின் கருவறையில் அசைய ஆரம்பிக்கும். இந்த நிலையில் புருவங்கள் நன்கு வெளிப்பட ஆரம்பிக்கும்.

கேட்கும் திறன்
கருதருத்த 24வது வாரத்தில் கருவறையில் இருக்கும் சிசுவிற்கு கேட்கும் திறன் ஆரம்பிக்கிறது. வெளியே பேசுவதை கூட சிசுவால் கேட்க இயலும். இந்த நிலையில் சிசுவின் உடல் உறுப்புகள் எல்லாம் உருவாகியிருக்கும்.

மூச்சு
கருவறையின் உள்ளே இருக்கும் சிசு 27வது வாரத்தில் இருந்து சுவாசிக்கும். 27வது வாரத்தில் சிசுவின் நுரையீரலில் சுரப்பிகள் சுரக்கிறது.

வாசனை உணர்வு
ஏறத்தாழ 28வது வாரத்தில் இருந்து கருவறையில் இருக்கும் சிசு வாசனையை உணரும் திறனை அடைகிறது. நாம் வாசனையை உணர்வது போலே, அந்த சிசுவினால் உணர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கண் திறப்பது
32வது வாரத்தில் கருவறையில் இருக்கும் சிசு தனது கண்களை திறக்கிறது. கருவறையில் சிசு தலை கீழான நிலையில் தான் இருக்கும். (பெண்ணின் பிறப்புறுப்பின் இடத்தில தலையும், வயிற்று பகுதியை நோக்கி கால்களும்). இந்த நிலையில் சிசு 40 – 55 செ.மீ வரையிலான உயரத்தில் இருக்குமாம்.