பொதுவாக அனைவருக்குமே தங்கள் உதடுகள் நன்கு சிவப்பு நிறத்தில் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். உதடுகள் நன்கு அழகாக இருந்தால், முகத்தின் அழகு இன்னும் அதிகரித்து வெளிப்படும். ஆனால் அந்த உதடுகள் கருமையாக இருந்தால், அது முகப்பொலிவை நீக்கி, முகத்தை பொலிவின்றி வைத்துக் கொள்ளும். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் புகைப்பிடிப்பது தான்.
ஏனெனில் புகைப்பிடிக்கும் போது உதட்டில் உள்ள மென்மையான லேயரானது எரிந்து, உதட்டை கருமையாக்கிவிடுகின்றன. மேலும் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் என்னும் அல்கலாய்டும் ஒரு காரணம். இது முகத்தில் உள்ள இரத்தக்குழாய்களை கடினமாக்கி, முகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைத்து, முகம் மற்றும் உதட்டின் நிறத்தை மங்கச் செய்கிறது. அதுமட்டுமின்றி நிக்கோட்டின் உடலானது இரும்புச்சத்தை உறிஞ்சுவதை குறைத்து, சருமத்தின் இயற்கையான நிறத்தை இழக்கச் செய்கிறது.
சில நேரங்களில் கருமையான உதடுகள் ஏற்படுவதற்கு இறந்த செல்களும் ஒரு காரணம். உதடுகளில் பராமரிப்பு குறைவாக இருந்தால்,உதடுகளில் இறந்த செல்கள் தங்கி, உதடுகளின் இயற்கையான நிறத்தை மங்கச் செய்கிறது. புகைப்பிடிக்காமல் இருக்கும் ஆண்களுக்கு உதடுகள் கருமையடைகின்றன என்றால், அதற்கு இது தான் காரணமாக இருக்கும். ஆனால் இத்தகைய கருமை நிரந்தரம் அல்ல. ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரித்தால், உதடுகளில் உள்ள கருமை நீங்கிவிடும். சரி,இப்போது அப்படி கருமையாக இருக்கும் உதடுகளை பொலிவாக்குவதற்கு உதவும் பொருட்களைப் பார்ப்போமா!!!
தேன்
நல்ல அழகான உதடுகள் வேண்டுமானால், தேனை உதடுகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தேன் உதட்டில் உள்ள கருமையைப் போக்கி, உதடுகளை மென்மையாக்கும். அதிலும் இரவில் படுக்கும் முன், உதடுகளில் தேனை தடவி படுத்தால், விரைவில் கருமை நீங்கிவிடும்.
பீட்ரூட்
ஆண்கள் ஒரு துண்டு பீட்ரூட்டை எடுத்து, அதனைக் கொண்டு உதடுகளில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், உதடுகளில் உள்ள கருமை மறைந்து, உதடுகள் இயற்கையான நிறத்தைப் பெறும்.
எலுமிச்சை
எலுமிச்சை ப்ளீச்சிங் தன்மை கொண்ட் ஒரு அருமையான பொருள். எனவே எலுமிச்சையில் சிறிது உப்பு சேர்த்து,அதனைக் கொண்டு உதடுகளை ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் உதடுகளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடுகளில் உள்ள கருமைகள் மறைந்துவிடும்.
ஸ்ட்ராபெர்ரி லிப் பாம்
ஆண்களின் உதடுகளில் உள்ள கருமையைப் போக்குவதற்கு இருக்கும் ஒரு சிம்பிளான இயற்கை வைத்தியம் என்றால், அது ஸ்ட்ராபெர்ரி லிப் பாம் தான். அதற்கு ஸ்ட்ராபெர்ரியை மசித்து, அதில் சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை சேர்த்து கலந்து,தினமும் இரவில் படுக்கும் போது தடவிக் கொண்டு படுக்க வேண்டும்.
ராஸ்ப்பெர்ரி
உதடுகளை பராமரிக்கப் பயன்படும் பொருட்களை பெர்ரிப் பழங்கள் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. ஏனெனில் பெர்ரிப் பழங்கள் உதடுகளில் உள்ள கருமையைப் போக்கி, உதடுகளை பிங்க் நிறத்தில் மாற்றக்கூடிய சக்தி கொண்டவை. ஆகவே ராஸ்ப்பெர்ரி பழத்தை தேன் அல்லது கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, தினமும் உதடுகளில் தடவி வந்தால், உதடுகள் அழகான நிறத்தைப் பெறும்.
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெயை உதடுகளில் தடவினால், அவை வறட்சியைப் போக்குவதுடன், உதடுகளில் உள்ள கருமையைப் போக்குவதிலும் உதவும். எனவே நல்ல மென்மையான மற்றும் சிவப்பான உதடுகள் வேண்டுமெனில், விளக்கெண்ணெயை உதடுகளுக்கு தடவுங்கள்.
ஐஸ் கட்டிகள்
தினமும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்தால்,உதடுகிளல் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, உதடுகளும் வறட்சியடையாமல் இருக்கும்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயை ஒரு நாளைக்கு 2-3 முறை தடவி வந்தால், உதடுகளில் உள்ள கருமை நீங்கி, உதடுகளும் மென்மையாக அழகாக இருக்கும்.