Home சமையல் குறிப்புகள் சளி, இருமலுக்கு மருந்தாகும் திப்பிலி ஸ்பெஷல் ரசம்

சளி, இருமலுக்கு மருந்தாகும் திப்பிலி ஸ்பெஷல் ரசம்

31

download (5)தேவையான பொருட்கள் :

கண்டந்திப்பிலி – 10 கிராம்
சீரகம் – 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் – 2
புளி – சிறிய எலுமிச்சம் பழ அளவு
உப்பு – தேவைக்கு

தாளிக்க:

நெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

* வாணலியில் கண்டந்திப்பிலி, சீரகம், துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய் போன்றவைகளை வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள்.

* புளியை கரைத்து பாத்திரத்தில் கொட்டி கொதிக்கவிடுங்கள். நன்கு கொதிக்கும்போது அரைத்து வைத்துள்ள பொடியைகொட்டி, லேசாக கொதிக்க விடுங்கள்.

* கடைசியாக தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து கொட்டுங்கள்.

* கண்டந்திப்பிலி உடல் வலியை போக்கக்கூடியது. சளி, இருமலுக்கு நல்ல மருந்து. பிரசவித்த பெண்கள் இந்த ரசத்தை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட வேண்டும். உடல்வலி நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.