கோடை காலத்தில் சருமத்தில் உள்ள நுண் துளைகளில் அதிக அளவு கழிவுகள் அடைத்துக்கொள்கின்றன. இதனால் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு தொற்றுநோய்களும் ஏற்படுகின்றன. மேலும் கண்ணுக்குத் தெரியாத வகையில் காணப்படும் தோலின் நுண் துளைகள் பருக்கள் மற்றும் கொப்புளங்கள் ஆகியவற்றால் கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு பெரிதாகி அழகை கெடுக்கும் வகையில் காணப்படுகிறது. எண்ணெய் வகை சருமத்தினருக்கே இப்பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். தரம் குறைந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தினாலும் சருமம் பாதிக்கப்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள். சருமத்தை பாதுகாக்க அவர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.
பேஸ் பேக்
முதலில் தோலை சுத்தப்படுத்தும் விதிமுறைகளை கையாள வேண்டும். அதன் பின் 5 நிமிடங்கள் ஆவி பிடித்த பின் தோலில் விரிவடைந்த நுண் துளைகளை சரி செய்வதற்கான பராமரிப்புகளை மேற்கொள்ளலாம்.
காய்கறிகள் பழங்கள் அல்லது மூலிகைகள் அடங்கிய ‘பேஸ் பேக்’குகள் தோலில் விரிவடைந்த துளைகளை சரி செய்ய உதவுகிறது.
ஓட்மீலுடன் வெள்ளரிச்சாறை கலந்து முகத்தில் பூசி 2 நிமிடங்கள் முதல் 3 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவலாம்.