Home பெண்கள் அழகு குறிப்பு சரும சுருக்கத்திற்கு குட் பை சொல்லும் இயற்கை ஃபேஸ் பேக்

சரும சுருக்கத்திற்கு குட் பை சொல்லும் இயற்கை ஃபேஸ் பேக்

38

Captureமுதுமை அடையாமல் யாரும் இருக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் வயதான தோற்றத்தை தள்ளிப் போடலாம் அல்லவா? உங்கள் இளமையை நீட்டிக்கச் செய்ய நீங்கள் செய்ய வேண்டியது போதிய பராமரிப்பு மட்டுமே. உங்களுக்கான எளிய இயற்கையான குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

பால் மற்றும் தேன் கிளின்ஸர் :

தேன் – 1 டேபிள் ஸ்பூன்
காய்ச்சாத பால் – அரை டேபிள் ஸ்பூன்

செய்முறை :

பால் மற்றும் தேன், இரண்டையும் கலந்து முகத்தில் போடுங்கள். 10 நிமிடம் கழித்து, முகத்தை கழுவவும். தேன் சருமத்தில் உள்ள நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கச் செய்யும், சுருக்கங்களைப் போக்கும்.

பால் இயற்கையாக கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. பாலிலுள்ள லேக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள அழுக்குகளையும் இறந்த செல்களையும் வெளியேற்றுகிறது.

எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை :

சர்க்கரை – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

சர்க்கரை கரையும் வரை எலுமிச்சை சாற்றில் கலந்து பின் முகத்தில் போடவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். சர்க்கரையில் உள்ள கிளைகோலிக் அமிலம் பாதிப்படைந்த சருமத்தை சரி செய்கிறது. எலுமிச்சையில் உள்ள விட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

முட்டையின் வெள்ளைக் கரு மாஸ்க் :

இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் அதில் சிறிது புளிக்காத தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். நன்றாக நுரை வரும் வரை அவற்றை அடித்துக் கொள்ளுங்கள். பின் அதனை முகத்தில் போடவும். சுருக்கங்கள் அதிகம் உள்ள பகுதிகளின் சற்று கூடுதலாக போடவும்.

நன்றாக முகம் இறுகும் வரை காய விடுங்கள். இந்த பேக் போடும் போது பேச கூடாது. அப்படி பேசியானல் இந்த இடங்களில் சுருக்கம் வரும். பின் வெதுவெதுப்பான நீரினால் கழுவுங்கள். வெள்ளைக் கரு முழுவதும் ப்ரொட்டினினால் ஆனது. கொலாஜனை அதிகரிக்கச் செய்யும். மேலும் தொய்வடைந்த சருமத்தை இறுக்கி, சருமத்திற்கு போஷாக்கு அளிக்கும்.

மேலே சொன்ன அனைத்து டிப்ஸ்களுமே சருமத்தின் சுருக்கங்களை போக்கும். சருமத்திற்கு எந்த வித பாதிப்பையும் தராது.

இவற்றோடு, உணவிலும் நல்ல காய்கறிகள், ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை உண்ணும் போது இழந்த இளமையை திரும்ப பெறலாம் என்பதில் சந்தேகமேயில்லை