தேவையான பொருட்கள் :
பார்லி -50 கிராம்
ராஜ்மா – 50 கிராம்
பாசிப்பருப்பு – 50 கிராம்
உளுத்தம் பருப்பு – 50 கிராம்
கொள்ளு – 50 கிராம்
சோயா -50 கிராம்
வரமிளகாய் – 5
சீரகம் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 பெரியது
மல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
• கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• பார்லி, ராஜ்மா, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கொள்ளு, சோயா, வரமிளகாய் அனைத்தையும் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
• ஊற வைத்த பொருட்களுடன் மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
• அரைத்த மாவில் வெங்காயம், மல்லி இலையையும் போட்டு நன்றாக கலக்கவும்.
• தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.