Home சமையல் குறிப்புகள் சத்தான ஓட்ஸ் கட்லெட் செய்முறை விளக்கம்

சத்தான ஓட்ஸ் கட்லெட் செய்முறை விளக்கம்

22

Captureதேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – ஒரு கப்,
வெங்காயம், உருளைக்கிழங்கு (சின்னது) – தலா ஒன்று,
பச்சைப் பட்டாணி, கேரட் (துருவியது), குடமிளகாய் (நறுக்கியது) – தலா அரை கப்,
பிரவுன் பிரெட் ஸ்லைஸ் – 2,
தனியாத்துள், சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – தேவைக்கு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பிரெட்டை பொடி செய்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கியதும் அதில் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, குடமிளகாய், கேரட், பச்சைப் பட்டாணி, சேர்த்து நன்றாக கிளறி மூடி வைத்து, வேகவிடவும்.

* காய்கள் வெந்ததும் நன்றாக மசித்து, அதனுடன் பிரெட் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து ஓட்ஸ் பொடியில் நன்றாக இரண்டு பக்கமும் புரட்டி, உருண்டைகளாக்கி, வேண்டிய வடிவில் தட்டி வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டி வைத்துள்ள கட்லெட்டை போட்டு சுற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சுவையான சத்தான ஓட்ஸ் கட்லெட் ரெடி.