Home சமையல் குறிப்புகள் கோஸ் ரைஸ்

கோஸ் ரைஸ்

23

1என்னென்ன தேவை?

கோஸ் – 2 கப்,
அரிசி – 1 கப்,
உப்பு – 1 1/2 டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை – ஒரு கைப்பிடி,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பூண்டு – 1 பல்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 டீஸ்பூன்.

தூள்கள்…

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
சாம்பார் தூள் – 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் – 1 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரிசியில் ஒரு சொட்டு நல்லெண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உதிரியாக வடித்துக் கொள்ளவும். ஒரு நான்-ஸ்டிக் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய கோஸ், உப்பு, தூள்கள் அனைத்தையும் சேர்த்து 3 அல்லது 5 நிமிடங்கள் (கோஸ் வேகும் வரை) மூடி வைத்து வதக்கவும். இந்தக் கலவையை வடித்த சாதத்துடன் சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லி, வறுத்த வேர்க்கடலை சேர்த்துக் கலந்து