Home சமையல் குறிப்புகள் கோழி இறைச்சிப் பிரட்டல்

கோழி இறைச்சிப் பிரட்டல்

19

தேவையான பொருட்கள்:

கோழி – 1
உலர்ந்த மிளகாய் – 13
பூண்டு – 5 பல்லு
இஞ்சி – அரை அங்குலம்
மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை
சீரகம் – அரை தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்கரண்டி
மிளகு – 10 தேக்கரண்டி
பட்டை – ஒரு அங்குலம்
பிரிஞ்சி இலை சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய்ப்பால் – அரை கப்
சின்ன வெங்காயம் – 12 கப் அரிந்தது
நெய் – 3 மேசைக்கரண்டி
எலுமிச்சம்பழச்சாறு ஒரு மேசைக்கரண்டி
உப்பு சுவைக்கேற்ப

செய்முறை:

கோழி இறைச்சியைக் கழுவி ஓரளவு நடுத்தரத் துண்டங்களாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இறைச்சி, பொடி செய்த பொருட்கள், சிறிதாக அரிந்த இஞ்சி, பூண்டு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, இரண்டாந்தடவை பிழிந்த தேங்காய்ப்பால் ஆகியவற்றோடு சுவைக்கேற்ப எலுமிச்சை பழச்சாறு, உப்பு ஆகியவற்றையும் இட்டு மூடி நன்றாக வேக விட வேண்டும்.

கோழி நன்றாக வெந்ததும் முதலில் எடுத்த கெட்டி தேங்காய் பாலையும் ஊற்றி மேலும் 10 நிமிடங்களுக்கு வேக விட வேண்டும். இறைச்சிக் குழம்பை வேறொரு பாத்திரத்தில் மாற்றி வெறும் பாத்திரத்தில் நெய்யை ஊற்றி நன்றாகச் சூடானதும் அரிந்த வெங்காயத்தை இட்டு பொன்னிறமாகப் பொரிக்க வேண்டும்.

பின்னர் இதனுள் எடுத்து வைத்த இறைச்சியை மட்டும் (குழம்பு இல்லாமல்) கொட்டிக் குறைந்த வெப்பத்தில் மேலும் பத்து நிமிடங்களுக்கு வேக விட வேண்டும். பின்னர் குழம்பைக் கொட்டிக் குழம்பானது ஓரளவு கெட்டியாகும் வரை வேக வைத்து இறக்க வேண்டும்.