Home சமையல் குறிப்புகள் கோதுமை ரவை உப்புமா

கோதுமை ரவை உப்புமா

20

தேவையானவை:

கோதுமை ரவை- 1 கப்

தண்ணீர்- 2 கப்

பிடித்த காய்கள் பொடியாக நறுக்கியது- 1 கப்

பச்சை மிளகாய்-4,

பெரிய வெங்காயம்- 1 பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்

இஞ்சி பொடியாக நறுக்கியது- 1 ஸ்பூன்

எண்ணெய்- கொஞ்சம்

உப்பு தேவையானது

செய்முறை:

ப்ரஷர் பேனை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தபின், கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, கொஞ்சம் பெருங்காயம் போட்டு பொன் கலர் ஆனபின் வெங்காயம் போட்டு கொஞ்சம் வதங்கியபின் காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு ஒரு கிளறு கிளறி தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் உப்பு போட்டு ரவையை தூவியபடி போட்டு கிளறி ப்ரஷர் பேனை மூடி வைத்து ஒரு விசில் வந்தவுடன் இறக்கி, சிறிது நேரம் கழித்து திறந்து மேலே கொஞ்சம் நெய் [அ] தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிடவும். சுவையான கோதுமை ரவை உப்புமா தயார்.