கோதுமை மாவு – ஒரு கப்,
பீட்ரூட் – 2,
பால் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கருப்பட்டி அல்லது வெல்லம் – ஒரு
டீஸ்பூன்,
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை,
தேன் – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை:
• பீட்ரூட் துருவி தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து வைக்கவும்.
• ஒரு பாத்திரத்தில் பீட்ரூட் அரைத்த கலவையை போட்டு
அதனுடன் கோதுமை மாவு, பால், கருப்பட்டி அல்லது வெல்லம், உப்பு, பேக்கிங் சோடா, எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும்
(இட்லி மாவு பதத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்).
• தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை கனமான தோசை போல
வார்த்து, மூடிவைக்கவும். வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
• அதன் மீது தேனைத் தடவி துண்டு போட்டு கொடுக்கவும். இதை
குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.
• விருப்பப்பட்டால், முட்டையை அடித்து அதனுடன் மாவைக் கலந்தும் செய்யலாம்.