Home சமையல் குறிப்புகள் கோதுமை – கீரை அடை!!

கோதுமை – கீரை அடை!!

18

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 200 கிராம்
அரிசி மாவு – 100 கிராம்
உளுத்தம் மாவு – 100 கிராம்
முருங்கைக்கீரை – 100 கிராம்
வெங்காயம் – 100 கிராம்
காய்ந்த மிளகாய் -4
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

• வெங்காயம், காய்ந்த மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, உளுத்தம் மாவு ஆகிய மூன்றையும் சேர்த்து அதில் வெங்காயம், காய்ந்த மிளகாய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு கலந்து வைத்து கொள்ளவும்.

• தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் நன்றாக காய்ந்ததும் கலந்த மாவை உருண்டைகளாக உருட்டி தோசை கல்லில் போட்டு அடை பக்குவத்தில் தட்டவும்.

• சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

• இப்போது சத்தான சுவையான கோதுமை – கீரை அடை ரெடி.