கொழுப்பைக் குறைக்க எளிய உணவு இருக்க, கவலை உனக்கெதற்கு??
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. கொழுப்பைக் குறைக்கும் எளிய
உணவா? என்றும் அது என்ன உணவு என்றும் தெரிந் து கொள்ள ஆவலாக இருக்கும். அந்த உணவு என்ன தெரியுமா? அது நிலக்கடலைதான், இந்நிலக் கடலை ஏழைகளுக்கும் எளிதில் கிடைக்கும் உணவல்லா?
சரி இந்த நிலக்கடலை சாப்பிட் டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பல ரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையி ல்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழு ப்புதான் நிலக்கடலையில் உள்ளது.
நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்கு கிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன்சாச்சுரேட்டேட் வகை கொழுப்புள்ளது. பாலிஅன் சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்பு மே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பா தாமைவிட நிலக்கடலையில் நன்மை செய்யும்கொ ழு ப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒ மேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கி றது. கொழுப்பைக் குறைக்கிறது என் பதற்காக அளவுக்கதிகமாக நிலக்கட லையை உண்டால் பித்தம் வரும். அ தனால் தினந்தோறும் குறிப்பிட்டஅளவு நிலக்கடலை உட்கொண்டு வந்தாலே நமது உடலில்உள்ள கெட்ட க்கொழுப்பு கறைந்து, உடலை பல ப்படுத்தும். மேலும் வெறும் நிலக் கடலையைவிட பர்பி அல்லது கட லை உருண்டையை வாங்கி சாப் பிடலாம்.