உணவில் கொழுப்பு (Fat in diet)
எல்லோரும் உண்ணும் உணவில் கொழுப்பு உள்ளது, இது நமது உணவின் ஒரு அங்கமாகும். பொதுவாக பல உணவாதாரங்களில் நிறைவுற்ற மற்றும் நிறைவுறாத கொழுப்பாக இது காணப்படுகிறது.
நிறைவுற்ற கொழுப்புகள் பால் பொருள்களிலும் இறைச்சித் தயாரிப்புகளிலும் உள்ளன. விதைகள், பருப்புகள் மற்றும் காய்கறி எண்ணெய் வகைகளில் நிறைவுறாத கொழுப்புகள் உள்ளன. நிறைவுற்ற கொழுப்புகளில் தனித்த கார்பன் அணுக்களில் இரட்டைப் பிணைப்புகள் இருக்காது, நிறைவுறாத கொழுப்புகளில் அவற்றின் கொழுப்பு அமிலச் சங்கிலியிலேனும் குறைந்தது ஒரு இரட்டைப் பிணைப்பு இருக்கும். மேலும், நிறைவுற்ற கொழுப்புகள் அறை வெப்பநிலையில் திட நிலையில் இருக்கும், நிறைவுறாத கொழுப்புகள் திரவ நிலையில் உள்ளன.
உங்கள் உணவில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்புகளை எடுத்துக்கொள்வதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையலாம் என்பது வியப்பாகத் தோன்றலாம்.
கொழுப்பு உட்கொள்ளுதலும் விந்தணுக்கள் எண்ணிக்கையும் (Fat intake and sperm count)
2012இல் போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், 99 ஆண்கள் பங்கேற்றனர். இதில் இவர்களின் உணவுப் பழக்கம் மற்றும் விந்தணுவின் தரம் பற்றிய முழுமையான விவரங்கள் ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வில் பின்வரும் விஷயங்கள் கண்டறியப்பட்டன:
உள்ளெடுக்கும் மொத்த கொழுப்பில் 5% அதிகரித்தாலும் அது விந்தணுக்களின் எண்ணிக்கை 18% குறைவதுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும்.
கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்து நிறைவுற்ற கொழுப்பு உள்ளெடுக்கும் அளவில் 5% அதிகரித்தால், விந்தணுக்கள் எண்ணிக்கை 38% குறையலாம்.
கார்போஹைட்ரேட்டைக் குறைத்து மோனோசேச்சுரேட்டட் கொழுப்பு அல்லது பாலிஅன்சேச்சுரேட்டட் கொழுப்பு 5% உள்ளெடுப்பது மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கையுடன் தொடர்புடையதாகத் கண்டறியப்படவில்லை.
ஒமேகா-3 பாலிஅன்சேச்சுரேட்டட்கொழுப்பு அமிலங்கள் (PUFAகள்) விந்தணுக்கள் நகர்வுத் திறன் இயல்பாக இருப்பதுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
2013இல், டானிஷ் ஆண்கள் 701 பேர் பங்கேற்று நடத்தப்பட்ட மற்றோர் ஆய்வில், மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கையும் விந்தின் செறிவும் குறைவதற்கும் நிறைவுற்ற கொழுப்பு எடுத்துக்கொள்வதுடன் தொடர்பிருந்ததாகத் தெரியவந்தது. நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உட்கொள்ளும் ஆண்களின் குழுவில் உள்ளவர்களுக்கு விந்தின் செறிவு 38% குறைந்ததும் மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கை 41% குறைந்ததும் தெரியவந்துள்ளளது.
ஸ்பெயினில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், நிறைவுற்ற கொழுப்புகள் அதிகமுள்ள ஓர் உணவாதாரமான பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதால் விந்தின் தரம் குறைவாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் விந்தணுக்களின் நகர்வுத்திறனும் (Omega-3 fatty acids and sperm morphology)
மனிதர்கள் பங்கேற்று நடத்தப்பட்ட பிற ஆய்வுகள் சிலவற்றிலும், ஒமேகா-3 கொழுப்பு அமில சத்துணவின் நன்மைகளையும், இயல்பான நகர்வுத்திறன் கொண்ட விந்தணுக்களின் மொத்த சதவீதம் அதிகரித்ததையும், விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் நகர்வுத்திறன் அதிகரித்ததையும் தெரிவிக்கின்றன.
மனிதர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல் மற்றும் தரத்திற்கு உதவுவதில் கொழுப்பு அமிலங்கள் எப்படி உதவுகின்றன என இந்த ஆராய்ச்சிகள் இதுவரை கண்டறியவில்லை.
இறுதிக் கருத்து (Conclusion)
ஆண்களின் குழந்தை பெறும் திறனின் மீது உணவிற்கு உள்ள தாக்கத்தைப் பற்றி ஆராய்ச்சிகள் தெளிவாகக் காட்டுகின்றன. விலங்குகளில் (பால் மற்றும் இறைச்சி) இருந்து கிடைக்கும் நிறைவுற்ற கொழுப்புகள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைக்கின்றன, ஒமேகா-3 PUFAகள் போன்ற தாவரங்களில் இருந்து கிடைக்கும் நிறைவுறா கொழுப்புகள் விந்தணுக்களின் கட்டமைப்புக்கு அனுகூலமான விளைவுகளை ஏற்படுத்துகிறது மற்றும் விந்தணுக்களின் தலைப்பகுதியில் குறைபாடுகள் குறைவாக இருப்பதுடன் தொடர்புடையதாக உள்ளது.
மேலும், நிறைவுற்ற கொழுப்புகளை அதிகம் உள்ளெடுத்துக்கொள்வது ஆரோக்கியமற்றது என்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும் ஆபத்து மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் உண்டாகும் ஆபத்துக்கும் தொடர்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.
நிறைவுறாத கொழுப்புகளை உணவில் சேர்த்துக்கொள்வதும் நிறைவுற்ற கொழுப்புகளைக் குறைப்பதும் ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது, அதோடு நிறைவுறாத கொழுப்பை உள்ளெடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளால் அவர்களின் பொதுவான ஆரோக்கியமும் மேம்படுகிறது.